[ad_1] ஒலிம்பிக் போட்டிகளில் தனி நபராக அதிக பதக்கம் வென்ற நபர் யார்?

ஒலிம்பிக் போட்டிகளில் தனி நபராக அதிக பதக்கம் வென்ற நபர் யார்?

mukesh M, Samayam Tamil

Jul 26, 2024

அதிக பதக்கம் வென்ற நபர்!

அதிக பதக்கம் வென்ற நபர்!

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தனி நபராக இதுவரை அதிக பதக்கங்களை குவித்த நபர் யார்? இவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? என்பது குறித்து இங்கு காணலாம். (*தகவல்கள் ஜூலை 26, 2024 வரையில்)

Image Source: twitter-com

Michael Phelps - 28 பதக்கங்கள்!

அமெரிக்க நாட்டை சேர்ந்த நீச்சல் வீரர். 2004-16 இடைப்பட்ட ஆண்டுகளில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்ற இவர் 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை குவித்துள்ளார்!

Image Source: twitter-com

Larisa Latynina - 18 பதக்கங்கள்!

சோவியத் யூனியனை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. 1956-64 இடைப்பட்ட ஆண்டுகளில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்ற இவர் 9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 18பதக்கங்களை குவித்துள்ளார்!

Image Source: twitter-com

Paavo Johannes Nurmi - 12 பதக்கங்கள்!

பின்லாந்து நாட்டை சேர்ந்த தடகள வீரர். 1920–28 இடைப்பட்ட ஆண்டுகளில் ஒலிம்பிக்ஸில் பங்கெடுத்த இவர் 9 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளார்.

Image Source: twitter-com

Mark Andrew Spitz - 11 பதக்கங்கள்!

அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீரர். 1968–72 இடைப்பட்ட காலத்தில் இவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்தார். 9 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை இவர் குவித்துள்ளார்!

Image Source: twitter-com

Carl Lewis - 10 பதக்கங்கள்!

அமெரிக்காவை சேர்ந்த தடகள வீரர். 1984–96 இடைப்பட்ட காலத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கெடுத்த இவர் 9 தங்கம், ஒரு வெள்ளி என 10 பதக்கங்களை குவித்துள்ளார்.

Image Source: twitter-com

Marit Bjørgen - 15 பதக்கங்கள்!

நார்வே நாட்டை சேர்ந்த Cross-country skiing வீராங்கனை. 2002–18 இடைப்பட்ட காலத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கெடுத்த இவர் 8 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்கள் குவித்துள்ளார்.

Image Source: twitter-com

Ole Einar Bjørndalen - 13 பதக்கங்கள்!

நார்வே நாட்டை சேர்ந்த Biathlon வீரர். 1998–2014 இடைப்பட்ட காலத்தில் ஒலிம்பிக்ஸில் கலந்துக்கொண்ட இவர், 8 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 13 பதக்கங்களை வென்றுள்ளார்.

Image Source: twitter-com

Bjørn Dæhlie & Birgit Fischer - தலா 12 பதக்கங்கள்!

நார்வே நாட்டை சேர்ந்த Cross-country skiing வீரர் Bjørn Dæhlie மற்றும் ஜெர்மனியை சேர்ந்த Canoeing வீராங்கனை Birgit Fischer. இருவம் தலா 8 தங்கம், 4 வெண்கலம் என 12 பதக்கங்களை குவித்து இப்பட்டியலில் 8-வது இடத்தை பகிர்ந்துக்கொள்கின்றனர்!

Image Source: twitter-com

Thanks For Reading!

Next: கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு.. உலகின் பணக்கார கிரிக்கெட் வீராங்கனை யார் தெரியுமா?

[ad_2]