Aug 7, 2024
ஆம்ஸ்டர்டாம் 1928 ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் தங்க பதக்கத்தை வென்றது. போலாந்து அணியை 6-0 என்னும் கணக்கில் இந்தியாவின் ஆண்கள் ஹாக்கி அணி வீழ்த்தியது. அந்த தொடரில் இந்திய வீரர் தியான் சந்த் 14 கோல்கள் அடித்தார்
Image Source: x-com
1928ல் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக, 1932 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நடந்த ஹாக்கி போட்டியில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மட்டுமே பங்கேற்றன. இந்தியா, இரண்டு நாடுகளையும் பந்தாடி தங்க பதக்கத்தை உறுதி செய்தது
Image Source: facebook-com/proudarmyfans
ஹாக்கியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தியான் சந்த் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, 1936 ஒலிம்பிக்கிலும் ஜெர்மனியை 8-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றது
Image Source: x-com/indiahistorypic
1948 ஒலிம்பிக்கில் நம்மை பல ஆண்டுகளாக ஆட்சிப்புரிந்த பிரட்டிஷ் நாட்டின் அணியை இந்தியா எதிர்கொண்டது. பைனலில் 4-0 என்னும் கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றது. இது சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்க பதக்கமாகும்
Image Source: x-com
1952 ஒலிம்பிக் தங்க பதக்கத்தில் பல்பிர் சிங் முக்கியமான பங்கு வகித்தார். அரையிறுதியில் பிரிட்டினுக்கு எதிராக ஹாட்-ட்ரிக் கோல் அடித்தது மட்டுமின்றி நெதர்லாந்துக்கு எதிராக 5 கோல்களை அடித்து ஒலிம்பிக்கில் புதிய சாதனையும் நிகழ்த்தினார்
Image Source: x-com
1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா தனது 5வது பதக்கத்தை வென்றது. பிறகு, 1964 ஒலிம்பிக்கில் மீண்டும் பாகிஸ்தானை தோற்கடித்து அடுத்த தங்க பதக்கத்தை பெற்றது
Image Source: x-com
16 ஆண்டுக்கால தொடர் கடின உழைப்பால், 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஹாக்கி அணி தங்க பதக்கத்தை மீண்டும் வென்றது. ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் 4-3 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்
Image Source: x-com/weareteamindia
ஒலிம்பிக்கில் தனிநபர் தங்க பதக்கம் வெல்லும் கனவு, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தான் நிறைவேறியது. இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா, 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தங்க பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்
Image Source: x-com
ஒலிம்பிக்கில் தடகளப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்னும் பெருமையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கத்தை வென்று இந்திய வரலாற்றில் இடம்பிடித்தார்
Image Source: instagram-com
Thanks For Reading!