Aug 17, 2024
BY: Suganthi, Samayam Tamilஓட்ஸில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளது. மாலையில் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக, ஓட்ஸ் பயன்படுத்தி ஹெல்தியான ஸ்நாக்ஸ் ரெடி செய்து சாப்பிடுங்கள். அதனை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: istock
ஓட்ஸில் மசித்த உருளைக்கிழங்கு, கேரட், கொண்டைக்கடலை, சீரகம் மற்றும் பேரீச்சம்பழம் போன்ற உணவுகளை சேர்த்து பஜ்ஜி போட்டு புதினா சட்னியுடன் மாலை நேரத்தில் சாப்பிடலாம்.
Image Source: istock
ஓட்ஸூடன் முழு கோதுமை மாவு, விதைகள், கருப்பு மிளகு, பூண்டு சேர்த்து பிஸ்கட் தயாரித்து சாப்பிடலாம். ஹம்மஸ் அல்லது சீஸ் தொட்டு சாப்பிட்டால் டேஸ்டியாக இருக்கும்.
Image Source: istock
ஓட்ஸூடன் உருளைக்கிழங்கு, பட்டாணி, சீரகம், கொத்தமல்லி மற்றும் மஞ்சள் சேர்த்து சுடச்சுட சமோசா போட்டு சாப்பிடலாம்.
Image Source: pexels-com
ஓட்ஸூடன் பிரஷ் காய்கறிகள், மஞ்சள் மற்றும் சீரகம் போன்ற மசாலாப் பொருட்கள் சேர்த்து கஞ்சி செய்யவும். அத்துடன் பொரித்த முட்டை அல்லது அவகேடா பழத்தை சேர்த்து சாப்பிட செய்யலாம்
Image Source: istock
ஓட்ஸை பிளெண்டரில் அரைத்து மாவு ரெடி செய்யவும். அதனை பயன்படுத்தி பஞ்சு போன்று பான் கேக் தயாரித்து சாப்பிடலாம். பான் கேக்கை மேப்பிள் சிரப் அல்லது ப்ரஷ்ஷான பழங்களுடன் சேர்த்து பரிமாற வேண்டும்
Image Source: istock
ஓட்ஸூடன் முழு கோதுமை மாவு, ஈஸ்ட், தக்காளி சாஸ், பாலாடைக் கட்டி, காய்கறிகள் மற்றும் இறைச்சிகள் சேர்த்து பீட்சா தயாரித்து மொறுவென சாப்பிடலாம்.
Image Source: pexels-com
ஓட்ஸூடன் முழு கோதுமை மாவு, பழுத்த வாழைப்பழங்கள், நட்ஸ் வகைகள் சேர்த்து மஃபின் தயாரித்து சாப்பிடலாம். இது மிகுந்த சுவையுடையது.
Image Source: istock
ஓட்ஸ், துருவிய கேரட், துருவிய சுரைக்காய், சீஸ் மற்றும் முட்டை சேர்த்து ஓட்ஸ் காய்கறி கலவை ரெடி செய்யவும். அதனை பொன்னிறமாகும் வரை வேகவைக்க வேண்டும். சிறிய துண்டுகளாக கட் செய்து பரிமாற செய்யலாம்.
Image Source: istock
Thanks For Reading!