[ad_1] ‘ஓட்ஸ் - கிரான்பெர்ரி கேக்’ - செய்வது எப்படி தெரியுமா?

Jul 12, 2024

‘ஓட்ஸ் - கிரான்பெர்ரி கேக்’ - செய்வது எப்படி தெரியுமா?

mukesh M

‘ஓட்ஸ் - கிரான்பெர்ரி கேக்’!

ஓட்ஸுடன் கிரான் பெர்ரி மற்றும் பல பொருட்கள் சேர்த்து Eggless Cake ஒன்றினை மிகவும் எளிய முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

ஓட்ஸ் - 1 கப் | தயிர் - ¼ கப் | சமையல் எண்ணெய் - ¼ கப் | வெல்லம் (பொடியாக) - 1 கப் | பேக்கிங் சோடா - ¼ ஸ்பூன் | வெனிலா எசன்ஸ் - 1 ஸ்பூன் | கிரான் பெர்ரி - 1 கப் | பாதாம் - 1 கப்

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட ஓட்ஸை மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து - அகன்ற பாத்திரம் ஒன்றுக்கு மாற்றவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

பின் இதனுடன் பேக்கிங் சோடா, இடித்த வெல்லம், சமையல் எண்ணெய், தயிர், வெனிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து கட்டிகள் இல்லா வகையில் நன்கு கரைத்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

இதனிடையே எடுத்துக்கொண்ட பாதாமை நறுக்கி மாவு உள்ள பாத்திரத்திற்கு மாற்றவும். தொடர்ந்து கிரான்பெர்ரி துண்டுகளையும் சேர்த்து நன்கு கரைத்து தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 4

இதனிடையே கேக் செய்ய எடுத்துக்கொண்ட ஓவனை 180°C வெப்பநிலையில் 15 - 20 நிமிடங்களுக்கு Preheat செய்து தயார் செய்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 5

அதேநேரம் பேக்கிங் ட்ரே ஒன்றினை எடுத்து எண்ணெய் தடவி தயார் செய்து பின், தயாராக உள்ள கேக் சேர்மத்தை இதில் சேர்த்து தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.

Image Source: istock

ஓட்ஸ் - கிரான்பெர்ரி கேக் ரெடி!

பின் இந்த ட்ரேவினை தயாராக உள்ள ஓவனில் வைத்து 180°C வெப்பநிலையில் 35 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுக்க சுவையான ஓட்ஸ் - கிரான்பெர்ரி கேக் ரெடி!

Image Source: istock

எப்படி பரிமாறுவது?

சுவையான இந்த ஓட்ஸ் - கிரான்பெர்ரி கேக்கை சிறு துண்டுகளாக நறுக்கி - அதன் மீது பொடியாக நறுக்கிய உலர் பழங்களை தூவி கவர்ச்சியாக பரிமாறவும்!

Image Source: istock

Thanks For Reading!

Next: பெங்காலி ஸ்பெஷல் ‘ரோஷ் போரா’ செய்முறை!

[ad_2]