[ad_1] கங்கை நதி பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!

Jul 8, 2024

கங்கை நதி பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!

mukesh M, Samayam Tamil

புனித கங்கை நதி!

இந்தியரின் கலாச்சாரத்தை உலகம் அறிய செய்யும் ஒரு புண்ணிய நதியான ‘கங்கை நதி’ பற்றி பலரும் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு நாம் காணலாம்!

Image Source: pexels-com

தேசிய நதி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கங்கை நதியை (கடந்த 2008-ஆம் ஆண்டு) இந்தியாவின் தேசிய நதியாக அறிவித்தார்.

Image Source: unsplash-com

உயரத்தில் பிறக்கும் நதி!

கங்கை நதி ஆனது உத்தரகண்ட் மாநிலம் கங்கோத்தரி பனிப்பாறையில் இருந்து (சுமார் 3,892மீ உயரத்தில்) உருவாகிறது!

Image Source: unsplash-com

மிக நீளமான நதி!

சுமார் 2525 கிமீ தூரத்திற்கு பாயும் இந்த கங்கை நதி ஆனது இந்தியாவின் மிக நீளமான நதியாக பார்க்கப்படுகிறது!

Image Source: unsplash-com

பத்மா நதி!

புனித கங்கை நதி ஆனது வங்கதேசம் வழியே பயணிக்கும் இடத்தில், பத்மா நதி எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. பின் அங்கிருந்து கங்கை நதி தனது பயணத்தை தொடர்ந்து இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது!

Image Source: unsplash-com

புனித நகரங்கள் வழியே பயணம்!

இந்த புண்ணிய நதி ஆனது இந்திவாயின் புனித நகரங்களாக கருதப்படும் வாரணாசி, ஹரித்வார், ரிஷிகேஷ், பிரயாக்ராஜ் மற்றும் பல நகரங்களை ஒட்டி பயணிக்கிறது!

Image Source: unsplash-com

எண்ணற்ற நீர்நிலவாழ்வனைகளின் இருப்பிடம்!

இந்த புனித கங்கை நதி எண்ணற்ற நீர்நிலவாழ்வனகளின் (நிலத்திலும் - நீரிலும் வாழும் உயிரிணங்கள்) இருப்பிடமாக உள்ளது. தகவல்கள் படி இந்த கங்கை நதியில் டால்பின் உட்பட 90 வகை நீர்நிலவாழ்வன வாழ்கிறது!

Image Source: unsplash-com

உலகின் மிகப்பெரிய டெல்டா!

டெல்டா எனப்படுவது முக்கோண வடிவிலான குறைந்த, தட்டையான நிலப்பரப்பு ஆகும். கங்கை நதி - வங்காள விரிகுடாவில் இணைவதற்கு முன்னதாக சுந்தரவன காடுகளுக்கு உட்பட்ட பகுதியில் மிப்பெரிய டெல்டா பகுதியை உண்டாக்குகிறது. இது உலகின் மிகப்பெரிய டெல்டாவாக கருதப்படுகிறது.

Image Source: unsplash-com

துணை நதிகள் அதிகம் கொண்டது!

யமுனை ஆறு, கோசி ஆறு, கோமதி ஆறு, காக்ரா ஆறு, கண்டகி ஆறு போன்ற இந்தியாவின் முக்கிய ஆறுகள் இந்த கங்கை நதியின் துணை ஆறுகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது!

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: சென்னை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!

[ad_2]