[ad_1] கடற்கரைக்கு செல்லும் போது இந்த விஷயங்களை கட்டாயம் செய்யுங்க!

May 29, 2024

கடற்கரைக்கு செல்லும் போது இந்த விஷயங்களை கட்டாயம் செய்யுங்க!

Anoj

தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள்

சூரியனிடமிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சு ஏகப்பட்ட பாதிப்புகளை உங்கள் சருமத்தில் உண்டாக்குகிறது. சரும புற்றுநோய் அபாயம் கூட ஏற்படுகிறது. எனவே நீங்கள் கடற்கரைக்கு செல்லும் போது சன்ஸ்க்ரீன் போன்ற சில விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியம்.

Image Source: pexels-com

எக்ஸ்ஃபோலியண்ட் செய்யுங்கள்

எக்ஸ்ஃபோலியண்ட் செய்வதன் மூலம் உங்கள் சருமத்தின் மீதுள்ள இறந்த சரும செல்களை எளிதாக நீக்க முடியும். மேலும் ஸ்க்ரப் செய்வதால் சருமம் எளிதாக மாய்ஸ்சரைசர், சன்ஸ்க்ரீனை உறிஞ்சி கொள்ளும்.

Image Source: istock

ஹைட்ரேட்டிங் செய்தல்

ஆரோக்கியமான சருமத்திற்கு ஹைட்ரேட்டிங் செய்வது மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். இது சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது.

Image Source: istock

சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்

பரந்த ஸ்பெக்ட்ரம் கொண்ட சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள். இதுதவிர, வைட்டமின் சி சீரத்தையும் பயன்படுத்த செய்யலாம்

Image Source: pexels-com

லிப் பாமை பயன்படுத்துங்கள்

நீங்கள் கடற்கரைக்கு செல்லும் போது அதிக சூரிய ஒளியால் உதடுகள் வறண்டு போய் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதை தடுக்க லிப் பாமை பயன்படுத்துங்கள்.

Image Source: istock

கண் பாதுகாப்பு

சூரிய ஒளியில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க விரும்பினால் கண் கிளாஸ்களை அணிவது அவசியம். இது புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து கண்களை காக்க உதவுகிறது.

Image Source: pexels-com

நீர் சார்ந்த க்ளீன்சர்

சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதம் போகாமல் பாதுகாத்திட நீர் சார்ந்த க்ளீன்சரை பயன்படுத்த செய்யலாம். இது முகப்பருக்கள் மற்றும் சரும பிரச்சனைகளை போக்குகிறது.

Image Source: istock

மிஸ்ட் ஸ்ப்ரே

நீர் சார்ந்த மிஸ்ட் ஸ்ப்ரேக்களை நீங்கள் பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க பயன்படுகிறது. இது சருமத்திற்கு மென்மையான டோனராக செயல்படுகிறது.

Image Source: istock

பாடி மாய்ஸ்சரைசர்

பாடி மாய்ஸ்சரைசர் சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்ய உதவுகிறது. மேலும், சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டச்சத்து அளித்து பளபளப்பு மற்றும் பொலிவை பராமரிக்க உதவுகிறது

Image Source: istock

Thanks For Reading!

Next: நீச்சல் பயிற்சியின் போது சருமம், முடி பாதிக்கப்படுவதை எப்படி தடுப்பது?

[ad_2]