Aug 7, 2024
ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டரில் சருமழகை மேம்படுத்தும் நிறைய பண்புகள் உள்ளன. மேலும், இனிமையான நறுமணம் வாய்ந்தது. இதனை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
ரோஜா இதழ்கள் ( பூச்சிக்கொல்லி பயன்படுத்தாது), கண்ணாடி பாட்டில், தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
ரோஜா இதழ்களில் உள்ள அழுக்குகளை நீக்க குளிர்ந்த நீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதிலுள்ள அழுக்குகள் நீங்கும் வரை சுத்தம் செய்யுங்கள்.
Image Source: istock
இப்பொழுது தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு அதில் ரோஜா இதழ்களை போட வேண்டும். பாத்திரத்தை மூடி விடுங்கள் ரோஜா இதழ்கள் தண்ணீரில் நன்றாக ஊற வேண்டும்.
Image Source: istock
ரோஜா இதழ்களின் சாறு நன்றாக இறங்கியதும் கலவையை வடிகட்டிக் கொள்ளுங்கள். ரோஜா இதழ்களை லேசாக நறுக்கும் போது கூடுதல் சாற்றை பெறலாம்.
Image Source: istock
இப்பொழுது வடிகட்டிய ரோஸ் வாட்டரை ஒரு கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வையுங்கள். அதைக் கொண்டு ஃபிரிட்ஜில் வைத்து சேமியுங்கள்.
Image Source: istock
கூடுதல் நன்மையைப் பெற அதனுடன் சில துளிகள் கிளிசரின் அல்லது கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு தேவைப்படும் போது எடுத்து முகத்திற்கு பயன்படுத்தி வரலாம்.
Image Source: istock
ரோஸ் வாட்டரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது எக்ஸிமா, ரோசாசியா மற்றும் சரும எரிச்சலை போக்குகிறது.
Image Source: istock
ரோஸ் வாட்டரில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை போக்குகிறது. சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது.
Image Source: istock
Thanks For Reading!