May 11, 2024
BY: Anojஇது நிலக்கடலை, வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் இனிப்பு தின்பண்டமாகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அதன் எளிய செய்முறையை இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: istock
நிலக்கடலை - அரை கிலோ; வெல்லம் - 200 கிராம்; நெய் - சிறிதளவு; தண்ணீர் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் நிலக்கடலையை சேர்த்து நன்றாக வறுத்தெடுக்கவும். பின் அதன் தோலை உரித்துகொள்ள வேண்டும்
Image Source: istock
தோல் உரித்த நிலக்கடலையை மிக்ஸி ஜாருக்கு மாற்றி, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். நன்கு பொடியாக அரைத்துவிடக்கூடாது
Image Source: istock
பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி வெல்லம் சேர்க்க வேண்டும்.
Image Source: istock
வெல்லம் நன்றாக கரைந்து பாகு பதத்திற்கு வரும் வரை தொடர்ச்சியாக கிளற வேண்டும்
Image Source: istock
பாகு தயாரானதும் அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலையை சேரத்து நன்றாக கிண்டி அடுப்பை அணைத்துவிடலாம்
Image Source: pexels-com
பிறகு, எண்ணெய் தடவிய தட்டில் பட்டர் ஷூட் வைத்துவிட்டு கடலை கலவையை சேர்க்க வேண்டும். அரை மணி நேரம் கலவையை ஆறவைக்க வேண்டும்
Image Source: istock
அவ்வளவு தான், விருப்பமான வடிவில் கடலை மிட்டாயை கட் செய்து சாப்பிட செய்யலாம். இது மிகவும் ஆரோக்கியமான தின்பண்டமாகும்
Image Source: istock
Thanks For Reading!