[ad_1] கட்டுமானத்தின் உச்சம் Burj Khalifa; வியக்க வைக்கும் தகவல்கள்!

Jun 22, 2024

கட்டுமானத்தின் உச்சம் Burj Khalifa; வியக்க வைக்கும் தகவல்கள்!

Pavithra

உயரமான கட்டிடம்

உலகின் உயரமான கட்டிடம் என்கிற பெருமைக்குரிய புர்ஜ் கலிஃபா பற்றி நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், அது பற்றிய வியக்க வைக்கும் தகவல்களைப் பார்ப்போம்.

Image Source: unsplash-com

நகரும் தளங்கள்

புர்ஜ் கலிஃபாவில் அதிக உயரத்தில் இருக்கும் சில தளங்கள் பாலைவனத்தில் வீசும் பலத்த காற்றின் தாக்கத்தை எதிர்கொள்ள தொழில்நுட்பம் கொண்டு நகரும் தளங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

Image Source: unsplash-com

மலர்த் தோட்டம்

புர்ஜ் கலிஃபாவின் சிறப்பம்சங்களில் ஒன்று 2,000 அடி உயரத்தில் அதன் 150வது மாடியில் பாலைவனத்தின் மத்தியில் ஒரு மலர்த் தோட்டம் இருப்பதே. இது கட்டிடத்தின் வெப்பநிலையை சீர்படுத்தவும் உதவுகிறது.

Image Source: unsplash-com

மின்னல் வேக மின்தூக்கிகள்

உலகிலேயே அதிவேக மின்தூக்கிகள் இங்கு தான் உள்ளது. ஒரு விநாடிக்கு 10 மீட்டர் வேகத்தில் நகரும் இது புர்ஜ் கலிஃபாவின் 124-வது மாடியை ஒரு நிமிடத்தில் சென்றடையும்.

Image Source: unsplash-com

குளிரூட்டும் சவால்

வெப்பம் அதிகமான துபாயில் இவ்வளவு பெரிய கட்டிடத்தைக் குளிரூட்டுவது என்பது ஒரு பெரிய சவால். அதற்காகக் கட்டிடம் முழுவதும் கடல் நீரை செலுத்தும் புதுமையான முறையை இவர்கள் கையாண்டுள்ளனர்.

Image Source: unsplash-com

வெளிப்புற பராமரிப்பு

புர்ஜ் கலிஃபாவின் வெளிப்புற ஜன்னல்களை மேலிருந்து கீழாக முழுமையாக சுத்தம் செய்ய 3 மாதங்கள் எடுக்கிறதாம். முடித்ததும் மீண்டும் மேலிருந்து சுத்தப் படுத்தலைத் துவங்க வேண்டுமாம்.

Image Source: unsplash-com

உலக சாதனைகள்

உலகின் உயரமான கட்டிடம் என்பதைத் தவிர புர்ஜ் கலிஃபா மேலும் 6 உலக சாதனைகளைப் படைத்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான தளங்கள், உயரமான LED ஒளியூட்டப்பட்ட முகப்பு போன்றவை அடங்கும்.

Image Source: pexels-com

மலர் வடிவம்

இந்த கட்டிடத்தின் வடிவம் பாரம்பரிய இஸ்லாமியக் கட்டிடக் கலை மற்றும் பாலைவன பூவான ஸ்பைடர் லில்லி ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டது. இந்த மலர் அதன் நீண்ட இதழ்களுக்குப் பெயர் பெற்றது.

Image Source: unsplash-com

கிங்டம் ஜித்தா டவர்

சவூதி அரேபியாவின் ஜித்தாவில் கட்டப்பட்டு வரும் ‘கிங்டம் ஜித்தா டவர்’ பூர்ஜ் கலிஃபாவை விட 180மீ உயரமாக நிர்மாணிக்கப் படவுள்ளது. எனவே, விரைவில் உலகின் உயர்ந்த கட்டிடம் எனும் பெருமையை இது பெறும்.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: காஷ்மீருக்கு சுற்றுலா போறீங்களா? இந்த 8 விஷயத்தை மறக்காதீங்க!

[ad_2]