mukesh M
Jul 2, 2024
சினிமா என்பது கலை மட்டுமல்ல, புரட்சியும் கூட என்பதை சில இயக்குனர்கள் தங்களின் சாதி எதிர்ப்பு திரைப்படங்களின் வாயிலாக எடுத்துரைத்துள்ளனர். அந்த வரிசையில் வெளியான சில சாதி எதிர்ப்பு திரைப்படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Image Source: instagram-com
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் ஆனந்தி நடிப்பில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதியும், மதமும் மனித குலத்திற்கு எதிரானது என்று காட்டும் சட்டத்தோடு படம் ஆரம்பித்து ஒடுக்கு முறையை பற்றி விழிப்புணர்வு தரும்.
Image Source: instagram-com
பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு தலித் மனிதரை கதாநாயகனாக அவரது வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் அட்டகத்தி. இந்த படம் சாதிவெறிக்கு எதிரான அணுகுமுறையை படமாக கொண்டது.
Image Source: instagram-com
உயர்சாதி மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்வதை இந்த படம் அழகாக விளக்குகிறது. கமல் ஹாசன் நடிப்பில் வெளியான இந்தப் படம் சாதி வெறிக்கு எதிரான ஆரம்பக்குரல் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம்.
Image Source: instagram-com
சூர்யா நடிப்பில் வெளியான இந்த படம் அடக்குமுறையை எதிர்க்கும் ஆற்றல் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை காட்டுகிறது. ஆணாதிக்கத்தையும், சாதியையும் அழிக்க வேண்டிய அவசியத்தை அரசாங்கம் புரிந்து கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைக்கும் படம் இந்த ஜெய்பீம்.
Image Source: instagram-com
அநீதிக்குப் பழிவாங்க உயர்சாதி நபரை கொன்ற மகனை காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள விவசாயியின் வாழ்க்கை இந்த படத்தின் கதைக்களம். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் பூமணியின் "வெக்கை" நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.
Image Source: instagram-com
ஒரு தலித் மனிதன் தனது தந்தை மறைவிற்கு பின் கண்ணியமாக அடக்கம் செய்ய போராடுவது இந்த படத்தின் கதைக்களம். இயக்குனர் அம்ஷன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மனுசங்கடா.
Image Source: instagram-com
இது ஒரு வன்முறைத்திரைப்படம் அல்ல. ஒரு முடித்திருத்தும் நபர் அவர் ஊரில் இரு கட்சியினருடனான போரில் எப்படி தொடர்பு கொள்கிறார் என்பது தான் கதைக்களம்.
Image Source: instagram-com
தீண்டாமை மற்றும் பாலின பாகுபாட்டின் அளவுகளை கூர்மையாக சித்தரிக்கிறது மாடத்தி. இப்படத்தை இயக்குனர் லீனாமணிமேகலை இயக்கியுள்ளார்.
Image Source: instagram-com
Thanks For Reading!