[ad_1] கண் ஆரோக்கியத்திற்கு ஆமணக்கு எண்ணெய் - எப்படி பயன்படுத்துவது?

Aug 19, 2024

கண் ஆரோக்கியத்திற்கு ஆமணக்கு எண்ணெய் - எப்படி பயன்படுத்துவது?

mukesh M

கண்களுக்கு ஆமணக்கு எண்ணெய்?

கண் சார்ந்த பல ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் அழகு பிரச்சனைக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த மருந்தாக பார்க்கப்படும் நிலையில், இந்த ஆமணக்கு எண்ணெயை எப்படி முறையாக பயன்படுத்துவது என இங்கு காணலாம்!

Image Source: istock

கண் வறட்சியை போக்க!

கண்களின் வறட்சி நிலையை போக்க ஆமணக்கு எண்ணெயை நாம் சொட்டு மருந்து போல் பயன்படுத்தலாம். இருப்பினும் கண்களுக்கு இந்த ஆமணக்கு எண்ணெயை நேரடியாக பயன்படுத்தும் முன், எண்ணெயின் தூய்மை நிலையை ஆய்வு செய்வது அவசியம்!

Image Source: istock

கருவளையத்தை போக்கும்!

சருமத்தில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்வதோடு, சருமத்தின் மேல் அடுக்கில் படிந்திருக்கும் இறந்த செல்களை போக்குவது மற்றும் நிறமி பிரச்சனையை எதிர்த்து போராடுவது என கருவளையத்தை மறைக்கும் தன்மை இந்த ஆமணக்கு எண்ணெயில் காணப்படுகிறது!

Image Source: istock

Belaphritis அறிகுறிகளை தடுக்கும்!

Belaphritis எனப்படுவது கண்கள் - கருவிழி பகுதியில் உண்டாகும் வீக்கம் - தடிப்புகளை குறிக்கும் ஒரு பிரச்சனை ஆகும். ஆன்டி பாக்டீரியல் பண்பு கொண்ட இந்த ஆமணக்கு எண்ணெய், Belaphritis அறிகுறிகளை தடுக்கிறது!

Image Source: istock

இமை முடி வளர்ச்சிக்கு!

கண்களின் அழகை கூட்டும் இமை முடிகளின் வளர்ச்சிக்கு இந்த ஆமணக்கு எண்ணெய் கொண்டு பதமாக மசாஜ் செய்து வரலாம். ஆமணக்கு எண்ணெயில் காணப்படும் ரிசினோலிக் அமிலம், முடிகளின் வளர்ச்சியை தூண்ட உதவுகிறது!

Image Source: istock

கண் வீக்கத்தை குறைக்கும்!

அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட இந்த ஆமணக்கு எண்ணெய் கொண்டு கண்களுக்கு மசாஜ் செய்து விட, கண்கள் மற்றும் கண் இமை வீக்கம் குறையும். கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து, இந்த கண் வீக்க பிரச்சனையை இது தடுக்கிறது!

Image Source: istock

சுருக்கங்கள் மறையும்!

கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள் இளமை தோற்றத்தை பாதிக்கும் ஒரு விஷயமாக இருக்கும் நிலையில், சரும தளர்வுகளை தடுக்கும் பண்பு கொண்ட இந்த ஆமணக்கு எண்ணெய் கொண்டு தவறாது மசாஜ் செய்து வர சுருக்கங்கள் மறைந்து இளமை தோற்றத்தை பெறலாம்!

Image Source: istock

பக்க விளைவுகளும் உண்டு!

கண்களுக்கு இந்த ஆமணக்கு எண்ணெய் நேரடியாக பயன்படுத்த, ஒரு சிலர் கண்களில் எரிச்சல், வீக்கம், சிவத்தல் உள்ளிட சரும ஆரோக்கிய பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர்.

Image Source: pexels-com

கண் பார்வை இழப்பு!

அடர்த்தியான இந்த ஆமணக்கு எண்ணெயை கண்களுக்கு நேரடியாக பயன்படுத்த - தற்காலிக பார்வை இழப்பு (அ) மங்கலான பார்வை பிரச்சசனையை எதிர்கொள்ளலாம். ரிசினோலிக் அமிலத்தின் உள்ளடக்கம், விழித்திரை உணர்திறன் பிரச்சனையையும் உண்டாக்குகிறது!

Image Source: istock

Thanks For Reading!

Next: கண் புரை வராமல் தடுக்க உதவும் ஒருசில வீட்டு வைத்தியங்கள்

[ad_2]