Aug 17, 2024
கண்களின் கருவிழியில் வெள்ளை படலம் போல் தோன்றுவதை தான் கண் புரை என்று கூறுகிறார்கள். இதனை கேட்ராக்ட்ஸ் என்றும் ஆங்கிலத்தில் கூறுவார்கள். இந்த பாதிப்பானது பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
Image Source: istock
நோய் பாதிப்பின்றி வேறு சில காரணங்களாலும் கண்களில் புரை விழக்கூடும். அதன்படி, கண்களின் காயம் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அதன் காரணமாக கண்ணின் லென்ஸை உருவாக்கும் திசு மாறுபடக்கூடும். அப்படி நிகழும் காரணத்தினாலும் கண்களில் புரை விழும்.
Image Source: istock
கண்களில் செய்யப்படும் ஒருசில அறுவை சிகிச்சையின் பக்க விளைவுகள் காரணமாகவும் கூட இப்பாதிப்பு ஏற்படலாம். அதே போல் அதிக நேரம் சூரிய ஒளியில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும் இப்பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
Image Source: istock
நமது கண்களில் புரை விழும் நிலையில், நிறங்கள் மங்கலாக தெரிவது, அடிக்கடி கண்களில் தூசி விழுந்தது போல் ஓர் அசௌகரியம், அதிக வெளிச்சத்தை பார்க்க முடியாமல் சிரமப்படுவது உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுமாம்.
Image Source: istock
இந்த கண் புரையின் ஆரம்பக்கட்டத்தில் ஒருசில எளிய வைத்தியங்கள் மூலம் குணப்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். அதன்படி, 1 டேபிள்ஸ்பூன் அன்னாசிப்பொடி, 1 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை, 2 டீஸ்பூன் மல்லி தூள் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து தினமும் காலை மற்றும் மாலை வேளையில் குடித்து வந்தால் கண் புரை குணமாகும்.
Image Source: istock
பசலைக்கீரையை நன்கு சுத்தப்படுத்தி அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் நன்கு வேகவைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை வடிகட்டி கீரையை பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். அதனுடன் வேக வைத்த தண்ணீரையும் சேர்த்து உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து குடியுங்கள், நல்ல பலன் கிட்டும்.
Image Source: istock
க்ரீன் டீயில் அதிகளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுக்கள் நிறைந்துள்ளன. இது நம் கண்களுக்கு அதிகளவு பாதுகாப்பினை தரும் என்று கூறப்படுவதால், கண் புரை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 2 வேளை டீ குடிக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
Image Source: pexels
ஏலக்காயில் அதிகளவு வைட்டமின் சி, பயோஃபிளவனாய்டு, ரிபோஃபிலின் உள்ளிட்டவை உள்ளது. இது நமது கண்களுக்கு ஆரோக்கியமளிப்பதில் பெரும் பங்கினை கொண்டுள்ளது. அதனால், ஏலக்காயை தினசரி உணவில் சேர்த்து கொள்ளுங்கள், கண் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.
Image Source: istock
இவை அனைத்தும் ஆரம்பநிலை பாதிப்புகளுக்கு மட்டுமே, நாள்பட்ட பாதிப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்யவும் நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source: istock
Thanks For Reading!