Jun 10, 2024
ஊட்டச்சத்துக்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த இந்த ஆர்கான் எண்ணெயை 'திரவ தங்கம்' என்றும் கூறுகின்றனர். இது தலைமுடிக்கு அள்ளித்தரும் நன்மைகள் குறைத்தும், பயன்படுத்தும் வழிகள் பற்றியும் இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: istock
ஆர்கான் எண்ணெயில் விட்டமின் ஈ நிறைந்து காணப்படுகிறது. இது வலுவான ஆரோக்கியமான கூந்தலை தருகிறது. சுற்றுச்சூழல் காரணிகளால் கூந்தல் சேதமடைவதை குறைக்கிறது.
Image Source: istock
ஆர்கான் எண்ணெய் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மூலம் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இதன் மூலம் அடர்த்தியான கூந்தலை பெறலாம்
Image Source: istock
ஆர்கான் எண்ணெய் கூந்தலை பொலிவாக வைக்க உதவுகிறது. முடிக்கு பளபளப்பான தோற்றத்தை கொடுக்கும். கட்டுக்கடங்காத முடி உள்ளவர்களுக்கு இது சிறந்த ஒன்றாகும்.
Image Source: istock
ஆர்கான் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தலையில் இருக்கும் அரிப்பு, எரிச்சல் மற்றும் பொடுகு போன்ற பல பிரச்சனைகளை போக்க உதவுகிறது.
Image Source: istock
சில துளிகள் ஆர்கான் எண்ணெயை உள்ளங்கைகளில் எடுத்து உலர்ந்த கூந்தலில் அப்ளை செய்ய வேண்டும். இது முடியை ஹைட்ரேட்டிங் மற்றும் கண்டிஷனிங் செய்ய உதவுகிறது.
Image Source: istock
ஆர்கான் எண்ணெயை எடுத்து உச்சந்தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள். ஷவர் கேப் போட்டு மூடி 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு கூந்தலை அலசுங்கள். வாரத்திற்கு ஒரு முறை செய்து வர பலன் கிடைக்கும்.
Image Source: istock
ஆர்கான் எண்ணெய் கூந்தலுக்கு ஒரு பாதுகாப்பு அம்சமாக செயல்படுகிறது. ஹீட் ஸ்டைலிங் செய்வதால் ஏற்படும் முடி சேதத்தை தடுக்க ஆர்கான் எண்ணெய் உதவுகிறது.
Image Source: pexels-com
ஆர்கான் எண்ணெயை தேங்காயெண்ணெய், தேன் அல்லது தயிர் போன்ற பொருட்களுடன் சேர்த்து ஹேர் சிகிச்சைக்காக பயன்படுத்தி வரலாம். இது முடி ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
Image Source: istock
Thanks For Reading!