Jul 3, 2024
By: mukesh Mதொடர்ச்சியான பயன்பாட்டிற்கு பின் கருகிப்போகும் தோசை சட்டியை முறையாக சுத்தம் செய்து, பளபளவென மாற்றுவது எவ்வாறு? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
தோசை தவாவில் உள்ள இந்த கருகலை சுத்தம் செய்ய, போக்கிங் சோடா-வை முறையாக நாம் பயன்படுத்தலாம். இதற்கு நமக்கு 3 ஸ்பூன் பேக்கிங் சோடாவும் அரை பக்கெட் வெதுவெதுப்பான நீரும் வேண்டும்!
Image Source: istock
அரை பக்கெட் வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்துவிடவும். பின் இதில் தோசை சட்டியை முக்கி 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்து, பின் தேய்த்து சுத்தம் செய்ய நல்ல மாற்றம் காணலாம்!
Image Source: istock
தவாவில் உள்ள கறை குறையவில்லை எனில்; இந்த செயல்முறையை மீண்டும் மீண்டும் செய்யுங்கள். தவாவினை கழுவிய பின் அதில் உள்ள தண்ணீரை முழுவதுமாக அகற்றி பின் உலர்த்துவது அவசியம்!
Image Source: istock
தவாவில் உள்ள கறையை போக்க, பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஜெல்லினை போதுமான அளவு வெந்நீருடன் சேர்த்து பயன்படுத்த நல்ல மாற்றம் காணலாம்!
Image Source: istock
கறைபடிந்த தோசை தவாவினை சிறிதளவு பாத்திரம் கழுவும் ஜெல் கொண்டு நன்கு தேய்க்கவும். பின் இதில் கொதிக்க கொதிக்க சுட வைத்த தண்ணீரை சேர்த்து, சூடு நன்கு ஆறும் வரை காத்திருந்து பின் தேய்க்க கருகிய கறை நீங்கும்!
Image Source: istock
தோசை தவாவில் உள்ள கருகிய கறையை போக்க எலுமிச்சை பழத்தை நேரடியாக பயன்படுத்தலாம். இந்த செய்முறையை செய்ய நமக்கு 6 - 7 எலுமிச்சை பழம் தேவைப்படலாம்!
Image Source: istock
எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின், தோசை தவாவில் தண்ணீர் மற்றும் இந்த எலுமிச்சை பழங்களை சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கவும். பின் பதமான வெப்பநிலைக்கு திரும்பியதும், நன்கு தேய்த்து சுத்தம் செய்ய நல்ல மாற்றம் காணலாம்!
Image Source: pexels-com
தோசை தவாவில் கறை படியாமல் இருக்க, பயன்பாட்டிற்கு பின் சுத்தம் செய்துவிடவது நல்லது. இதேப்போன்று, தவாவினை சுத்தம் செய்த பின், அதில் உள்ள தண்ணீரை முழுவதுமாக அகற்றி நன்கு உலர விடுவது, தவாவின் ஆயுளை நீட்டிக்க உதவும்!
Image Source: istock
Thanks For Reading!