Jun 4, 2024
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று தான் கருங்குருவை அரிசி. இந்த அரிசியின் மேற்பரப்பு கருப்பு நிறத்திலும் உட்புறம் சிகப்பு நிறத்திலும் காணப்படும்.
Image Source: pixabay
கருங்குருவை அரிசியின் முழு ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு இதனை பயன்படுத்துவதற்கு முன்பு சுமார் 12 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
Image Source: pixabay
சித்தமருத்துவத்தில் இந்த கருங்குருவை அரிசி வகை ரத்த சோகை, பலவீனம், ஊட்டச்சத்து குறைபாடு, யானைக்கால், சின்னம்மை உள்ளிட்ட நோய்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
Image Source: pixabay
கருங்குருவை அரிசி பாலியல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பண்பு கொண்டுள்ளதால் இது 'இயற்கை வயாகரா' என்றும் அழைக்கப்படுகிறது. பித்த செயல்பாடுகள், ஹார்மோன் சுரப்பிகளை மேம்படுத்துவதோடு கருவுறுதலுக்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
Image Source: istock
கருங்குருவை அரிசியினை தொடர்ந்து உணவில் எடுத்து கொண்டால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பு சத்துக்களை அதிகரிக்க உதவும் என்றும் கூறுகிறார்கள்.
Image Source: pexels-com
கருங்குருவை அரிசி கொண்டு இட்லி, தோசை, புட்டு, பணியாரம், சாதம் போன்ற அனைத்து வழக்கமான உணவுகளையும் சமைத்து சாப்பிடலாம்.
Image Source: pexels-com
இந்த அரிசியினை தொடர்ந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.
Image Source: pixabay
உடலில் உள்ள நச்சுக்கள், தேங்கியுள்ள கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்ற உதவும் இந்த அரிசியில் உடலின் சுகாதாரத்தினை பேணும் வைட்டமின்கள், மினரல்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம்.
Image Source: pixabay
இதிலுள்ள உயர் நார்சத்து செரிமானத்தினை சீராக்குவதோடு, மலசிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது. இது பாரம்பரியமான உணவு வகை என்றாலும் இதிலுள்ள தனித்துவமான சுவை குழந்தைகளையும் விரும்பி சாப்பிட வைக்கும்.
Image Source: pexels-com
Thanks For Reading!