Jun 19, 2024
BY: Nivethaகருப்பு உளுந்தில் உடலுக்கு ஆரோக்கியமளிக்கும் கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்துக்கள், பாஸ்பரஸ், நார்சத்து உள்ளிட்டவை நிறைந்துள்ளது. இது வளரும் குழந்தைகள் முதல் வயதான முதியோர் வரை சாப்பிட கூடிய சத்தான உணவு வகை.
Image Source: Samayam Tamil
கருப்பு உளுந்து 1/2கப், வெள்ளை உளுந்து 1/2கப், கருப்பட்டி (அ)நாட்டு சர்க்கரை 1 கப், தேங்காய் துருவல்-1/2கப், முட்டை-1, ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
Image Source: pixabay
சுமார் 11/2 மணிநேரம் ஊறவைத்த கருப்பு உளுந்தினை 2-3 முறை நன்கு கழுவி எடுத்து அரைத்து கொள்ளுங்கள். அதே போல் தனியாக ஊறவைத்திருந்த வெள்ளை உளுந்தையும் கழுவி அரைத்து கொள்ளுங்கள்
Image Source: pexels
நன்கு திக்காக அரைத்து எடுத்த உளுந்த மாவோடு நாம் எடுத்து வைத்துள்ள நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டியை சேர்த்து நன்கு கிளறவும்.
Image Source: pixabay
பின்னர் அதில் முட்டையை உடைத்து ஊற்றி, 1 பின்ச் உப்பு, ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன் ஆகியவற்றையும் சேர்த்து ஒருசேர நன்கு கிளறவும்.
Image Source: pexels
மாவு கலவையில் துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு நன்கு கிளறி எடுத்து வைத்து கொள்ளுங்கள்
Image Source: pexels
அடுப்பில் பணியார சட்டியை வைத்து குழிகளில் நல்லெண்ணெய் விட்டு, சூடானவுடன் அதில் நாம் வைத்துள்ள மாவினை அரை குழி நிரம்புமாறு ஊற்றி வேக விடவும்.
Image Source: pixabay
ஒரு பக்கம் வெந்தவுடன் மறுப்பக்கம் திருப்பிவிட்டு வேக விட்டு, பொன்னிறமாக மாறியதும் எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பு உளுந்து பணியாரம் தயார்.
Image Source: istock
நாட்டு சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்தால் அதனை தண்ணீரில் கரைத்து பாகு எடுத்து வடிகட்டிய பின்னரே உளுந்தமாவில் கலக்க வேண்டும். ஏனெனில் அதில் தூசி, சிறு கற்கள் உள்ளிட்டவை இருக்கும்.
Image Source: pixabay
Thanks For Reading!