Jul 20, 2024
BY: Nivethaஇந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அதிகளவு விளையும் கருப்பு கவுனி அரிசியில் அதிகளவு நார்ச்சத்தும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளது. தற்போதைய அவசர உலகத்தில் நாம் சத்துக்கள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்னும் நிலையில் இந்த அரிசி நமது உணவு முறையில் இடம்பெறுவது என்பது அவசியமான ஒன்றாகும்.
Image Source: istock
கருப்பு கவுனி அரிசியில் அதிகளவு புரத சத்து உள்ளது. இது வளரும் குழந்தைகள் முதல் வயதான முதியோர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியம் அளிக்க கூடியது. எனவே இந்த அரிசியை குறைந்தபட்சம் வாரத்தில் இரண்டு முறையாவது உணவில் எடுத்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
Image Source: istock
கருப்பு கவுனி அரிசியில் இயற்கையாகவே ஆக்சிஜனேற்ற சக்தி அதிகம் நிறைந்துள்ளது. நாம் வழக்கமாக சாப்பிடும் வெள்ளை அரிசியோடு நாம் இந்த அரிசியை ஒப்பிட்டு பார்க்கும் பட்சத்தில் வெள்ளை அரிசியை விட உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Image Source: istock
இந்நிலையில் சத்துக்கள் நிறைந்த இந்த அரிசியில் இட்லி செய்வது எப்படி என்பதை இப்பதிவில் காண்போம். தினமும் வழக்கமான இட்லி, தோசை சாப்பிடுவதற்கு பதிலாக இது போன்று வித்தியாசமான மற்றும் சத்தான காலை உணவை அவ்வப்போது செய்து சாப்பிடுவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Image Source: istock
இந்த சத்தான மற்றும் சுவையான கருப்பு கவுனி அரிசி இட்லி செய்ய தேவைப்படும் பொருட்கள் மிகவும் குறைவு. கருப்பு கவுனி அரிசி 4 கப், உப்பு தேவையான அளவு, உளுந்து 1 கப், வெந்தயம் 1 டீஸ்பூன்
Image Source: istock
நாம் எடுத்து வைத்துள்ள கருப்பு கவுனி அரிசியை நன்கு கழுவி அதனை தண்ணீரில் போட்டு நான்கு மணி நேரம் நன்றாக ஊற விட வேண்டும். அதே போல் உளுந்தையும், வெந்தயத்தையும் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
Image Source: istock
ஊறவைத்த உளுந்தை முதலில் கிரைண்டரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். அடுத்து ஊற வைத்த கருப்பு கவுனி அரிசியை நைசாக அரைத்து எடுத்து கொண்டு, இரண்டையும் ஒன்றாக சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி போட்டு வைக்கவும்.
Image Source: Samayam Tamil
அரைத்து வைத்துள்ள மாவை மறுநாள் காலை நன்கு புளித்து வந்த பிறகு வழக்கம் போல் அதனை நன்றாக கிண்டி எடுத்து கொள்ளுங்கள். இட்லி தட்டில் அந்த மாவை ஊற்றி அடுப்பில் வைத்து வேக விட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான கருப்பு கவுனி அரிசி இட்லி தயார். இதே மாவை தோசையாக ஊற்றினால் கருப்பு கவுனி அரிசி தோசை ரெடி.
Image Source: istock
இந்த இட்லிக்கு பொட்டு கடலை சட்னி செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாகவும் சிறந்த காம்பினேஷனாகவும் இருக்கும். குழந்தைகளும் கருப்பு கவுனி அரிசியில் சத்து கஞ்சி செய்து தருவதை விட இது போல் இட்லி, தோசையாக செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்.
Image Source: istock
Thanks For Reading!