[ad_1] கருப்பு கவுனி அரிசி கொழுக்கட்டை செய்முறை

Jun 2, 2024

BY: mukesh M

கருப்பு கவுனி அரிசி கொழுக்கட்டை செய்முறை

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியத்தை அளிக்கும் கருப்பு கவுனி அரிசி கொழுக்கட்டை செய்முறையை இப்பதிவில் பார்ப்போம். கருப்பு கவுனி அரிசியினை வாரம் ஒருமுறை நமது உணவில் எடுத்து கொள்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Image Source: istock

தேவையான பொருட்கள்

கருப்பு கவுனி அரிசி மாவு - 1 கப், ஊறவைத்த அரிசி - ½ கப், துருவிய வெல்லம்-1 கப், தேங்காய் - 1 கப், நெய் தேவையான அளவு, முந்திரி -10, ஏலக்காய் - 5, உப்பு - 1 பின்ச். ஊறவைத்த இட்லி அரிசி மாவு சிறிதளவு.

Image Source: pexels-com

பூரணம் தயாரிப்பு

அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றி சூடான பின்னர் நறுக்கிய முந்திரியை போட்டு பொன்னிறமான பின்னர், அடுத்து தேங்காய் துருவலையும் அதில் சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும்.

Image Source: unsplash

வெள்ளம் சேர்க்கவும்!

நன்கு வதங்கிய பின்னர் அதில் ஏலக்காய் பொடியினை தூவி விட்டு, 1 கப் வெள்ளத்தினை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு ஆற விடவும்.

Image Source: pexels-com

மாவு தயாரிப்பு

கருப்பு கவுனி அரிசி மாவு, அரிசி மாவு, இட்லி அரசி மாவு (மென்மையாக இருக்க), நெய் சிறிதளவு சேர்த்து மாவினை நன்கு ஒருசேர கிளறி எடுத்து கொள்ளவும்.

Image Source: pexels-com

மாவின் பதம்

ஒரு கப் தண்ணீரில் 1 பின்ச் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அந்த நீரினை நாம் எடுத்து வைத்துள்ள மாவு கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக கை தாங்கும் அளவு சூட்டிற்கு விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

Image Source: unsplash

கொழுக்கட்டை

கையில் எண்ணெய்யை தடவி கொண்டு தற்போது பிசைந்து வைத்துள்ள மாவினை உருளையாக உருட்டி மெல்லிசாக எடுத்து அதில் சிறு குழி போல் செய்து அதில் பூரணத்தினை வைத்து கொழுக்கட்டையினை மூடி நன்கு அழுத்தி விடவும்.

Image Source: istock

வேகும் நேரம்

அடுத்து இட்லி குக்கரில் தண்ணீர் வைத்து அது நன்கு கொதிக்க துவங்கிய பின்னர் இட்லி தட்டில் வாழை இலையினை வைத்து நாம் செய்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து மூடி விடவும். 15 நிமிடத்திற்கு பின்னர் எடுக்கவும். கொழுக்கட்டை ரெடி.

Image Source: unsplash

முக்கிய குறிப்பு

கருப்பு கவுனி அரிசியினை முந்தைய நாளே ஊறவைத்து மறுநாள் காய வைத்து அரைத்து எடுக்க வேண்டும். அதே போல் இட்லி அரிசியினையும் இரவில் ஊறவைத்து மறுநாள் அரைத்து எடுத்து கொள்ளவும்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: உலகின் விலையுயர்ந்த சாக்லேட் வகைகள்!

[ad_2]