[ad_1] கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும் லவங்கப்பட்டை மற்றும் உணவு வகைகள்

Aug 20, 2024

கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும் லவங்கப்பட்டை மற்றும் உணவு வகைகள்

Nivetha

விந்தணு மற்றும் கருமுட்டை

தற்போதைய காலக்கட்டத்தில் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவு, கருமுட்டை வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு என்னதான் மருத்துவங்கள் செய்யப்பட்டாலும் அடிப்படையானது உணவு முறைகள் தான். அப்படி ஒரு சில உணவுமுறைகளை தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.

Image Source: istock

ஆய்வுகள்

சமீபகாலத்தில் உலகம் முழுவதும் ஆண்களின் விந்தணுக்கள் பெருமளவில் குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இது குறித்து நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகளில் சுமார் 53 நாடுகளில் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

Image Source: istock

மீன்கள்

ஒமேகா 3 கொழுப்புகள் அதிகமுள்ள சால்மன், மத்தி மீன்கள் போன்ற மீன் வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதே போல் வால்நட்ஸ், ஆளிவிதைகள், சியா விதைகள் போன்றவைகளை தவறாமல் சாப்பிட வேண்டும். இது போன்ற உணவு வகைகள் ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

Image Source: istock

பருப்பு வகைகள்

ஆண்களின் விந்தணுக்கள் அதிகரிக்க மற்றும் ஆரோக்கியமாக வளர பருப்பு வகைகள், கீரை வகைகள், வைட்டமின்கள் ஈ6, பி9, பி12, செலினியம், புரதம் உள்ளிட்டவை நிறைந்த உணவு வகைகள், வலுவூட்டப்பட்ட தானிய வகைகள் ஆகியவற்றை தவறாமல் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

Image Source: pixabay

கருமுட்டை

பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கும் கார்போஹைட்ரேட், புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், தாதுக்கள் உள்ளிட்டவை அடங்கிய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சீரான உணவு வகைகளை எடுத்து கொள்வது அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

Image Source: istock

அவகோடா பழங்கள்

ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகளவு அவகோடா பழங்களை எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதில் அதிகளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பராமரிக்கவும் உதவுகிறது.

Image Source: istock

லவங்கப்பட்டை

லவங்கப்பட்டைகளை நாம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கருவுறுதலுக்கு பெருமளவில் இது உதவும். இது கருப்பை செயல்பாட்டினை அதிகரிப்பதோடு, இன்சுலின் சுரப்பையும் கட்டுப்படுத்தி, கருமுட்டை உற்பத்தியை சரியான முறையில் ஊக்குவிக்கிறது.

Image Source: pexels

மஞ்சள்-லவங்கப்பட்டை

எப்படி சமையலில் மஞ்சள் அதிகமாக பயன்படுத்தினால் நல்லதோ அதே போல் பெண்கள் லவங்கப்பட்டையையும் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு கால் டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு குடித்து வந்தால் கருமுட்டை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

Image Source: istock

இதர உணவுகள்

வாழைப்பழம், உருளைக்கிழங்கு, முட்டை, பாதாம், முந்திரி, பிஸ்தா, ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, எள், ஏலக்காய் உள்ளிட்டவைகளை அதிகளவில் சாப்பிடுங்கள். எண்ணெய் பொருட்கள், பேக்கரி பொருட்கள், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

Image Source: istock

Thanks For Reading!

Next: பச்சிலைகள் கொண்டு பற்று போடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா ?

[ad_2]