May 10, 2024
நரை முடிகளை குறைத்து கருமையான, அடர்த்தியான கூந்தல் பெற உதவும் மூலிகை எண்ணெய் ஒன்றினை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
வெந்தயம் - 1 கப் | வெள்ளை எள்ளு - 1 கப் | கறிவேப்பிலை - 1 கைப்பிடி | தேங்காய் எண்ணெய் - 2 கப்
Image Source: istock
முதலில் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் வெந்தயம், வெள்ளை எள்ளு சேர்த்து (மிதமான சூட்டில்) கருமையாக மாறும் வரை வறுத்துக்கொள்ளவும்.
Image Source: istock
தொடர்ந்து இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாற வறுத்து தனி ஒரு தட்டிற்கு மாற்றி நன்கு ஆற விடவும்.
Image Source: istock
இச்சேர்மம் நன்கு ஆறியதும் மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து தனி ஒரு கோப்பைக்கு மாற்றிக்கொள்ளவும்.
Image Source: istock
பின் இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து 24 மணி நேரங்கள் வரை ஊற வைக்க கூந்தல் கருமையை உறுதி செய்யும் எண்ணெய் ரெடி!
Image Source: istock
தயாராக உள்ள இந்த தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் பரவும் படி நன்கு அப்ளை செய்து 2 மணி நேரங்கள் வரை ஊற வைக்கவும். பின், மிதமான ஷேம்பு பயன்படுத்தி சுத்தம் செய்து விடவும்.
Image Source: istock
உச்சந்தலையில் சீரான இரத்த ஊட்டத்தை உறுதி செய்து, தலைமுடி வேர் கால்களை பலப்படுத்தும் இந்த மூலிகை எண்ணெய் ஆனது, கூந்தல் உதிர்வை தடுப்பதோடு, வளர்ச்சியையும் தூண்டுகிறது.
Image Source: pexels-com
கறிவேப்பிலை, வெந்தயம், எள்ளு கலவையில் உண்டாகும் இந்த எண்ணெய் ஆனது நரை முடிகளை மறைப்பதோடு, பித்தத்தால் உண்டாகும் இளநரை பிரச்சனைக்கும் தீர்வு அளிக்கிறது.
Image Source: istock
Thanks For Reading!