Aug 10, 2024
சருமத்தில் உள்ள கரும்புள்ளி, வெண்புள்ளிகளை போக்கும் பேக் ஒன்றினை மஞ்சள், சர்க்கரை, பால், கடலை மாவு மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
மஞ்சள் - 1 ஸ்பூன் | சர்க்கரை - 1 ஸ்பூன் | பால் - 1 ஸ்பூன் | கடலை மாவு - 1 ஸ்பூன் | தேங்காய் எண்ணெய் - ½ ஸ்பூன்
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட சர்க்கரையை ஒரு கோப்பையல் பாலுடன் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும்.
Image Source: istock
தொடர்ந்து இதனுடன் மஞ்சள், கடலை மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்துக்கொள்ளவும்.
Image Source: istock
பின் இறுதியாக இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கரைத்து கொள்ள பேஸ் பேக் ரெடி!
Image Source: istock
தயாராக உள்ள இந்த பேக்கினை சருமத்திற்கு அப்ளை செய்து நன்கு உலர காத்திருக்கவும். பின், தேங்காய் எண்ணெய் உதவியுடன் எதிர்திசையில் இந்த பேக்கினை நீக்கி சுத்தம் செய்யவும்!
Image Source: pexels-com
சருமத்திற்கு இந்த பேக்கினை பயன்படுத்திய பின்னர், தண்ணீர் கொண்டு நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின் மாய்ஸ்சரைசர் கிரீம் பயன்படுத்தி சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கவும்!
Image Source: istock
சருமத் துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்யும் இந்த பேக் சரும துளைகளில் மறைந்திருக்கும் மாசுக்களை நீக்கி, கரும்புள்ளி - வெண்புள்ளி பிரச்சனையில் இருந்து விடுப்பட உதவுகிறது!
Image Source: istock
சருமத்தில் மறைந்திருக்கும் மாசுக்களை போக்குவதோடு, சருமத்தின் மேல் அடுக்கில் படிந்திருக்கும் இறந்த செல்களை போக்கும் இந்த பேக் பொலிவான மற்றும் பளபளப்பான சருமம் பெற உதவுகிறது!
Image Source: istock
Thanks For Reading!