Jul 15, 2024
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு சிலர் தங்கள் வயிற்றில் வளரும் குழந்தை எட்டி உதைப்பது போன்ற ஒரு உணர்வை எதிர்கொள்வது உண்டு. கர்ப்பிணிகள் சந்திக்கும் இந்த உணர்வு குறித்து விரிவாக இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி இந்த உதைப்பது போன்ற உணர்வு உண்மை தான். கருப்பையில் குழந்தை அசைய துவங்கியதும், திரும்புவது, உருள்வது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறது - இது, வயிற்றை உதைப்பது போன்ற ஒரு உணர்வை கர்ப்பிணிகளுக்கு அளிக்கிறது!
Image Source: istock
ஆம், கருவில் வளரும் குழந்தையின் இந்த அசைவுகளும் - அசைவுகளினால் உண்டாகும் உணர்வுகளும் இயல்பான ஒன்றே ஆகும். குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சியை குறிக்கும் இந்த உணர்வு; கர்ப்பிணிகள் அனைவரிடமும் இயல்பான ஒன்று ஆகும்!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி கர்ப்பிணிகள் உட்கொள்க்கும் உணவு, அவர்களுக்கு அருகில் கேட்கும் சத்தங்கள், தாயின் அசைவு போன்றவை என பல காரணிகள் - குழந்தைகளின் இந்த உடல் அசைவுக்கு வழிவகுக்கின்றன!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி, கர்ப்ப காலத்தின் 16 - 24 வாரங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த அசைவுகள் தென்பட துவங்குகிறது. பிரசவிக்கும் நாள் வரை இந்த அசைவுகள் தொடரும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!
Image Source: istock
கர்ப்பிணி பெண்கள் பக்கவாட்டில் படுக்கும் போது குழந்தைகளுக்கு இரத்த விநியோகம் அதிகரிக்கிறது. இது, சிசுவின் உடல் இயக்கத்தை தூண்டி, தொடர்ச்சியான அசைவுகளுக்கு வழிவகுக்கும்!
Image Source: istock
குழந்தைகளின் ஆரோக்கிய நிலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் இந்த உதைகளை கர்ப்பிணி பெண்கள், ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் சுமார் 10 முறை உணரலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் பெண்கள் மன சோர்வில் இருப்பதும், சோர்ந்து இருப்பதும் குழந்தையின் உடல் இயக்கத்தை பாதிக்கலாம். இதன் விளைவாக குழந்தையின் உதைகள் (எண்ணிக்கை) குறையக்கூடும்!
Image Source: istock
அம்னோடிக் திரவம் கசிவு, நஞ்சுக்கொடி சீர்குலைவு போன்ற சில ஆபத்தான சூழ்நிலைகளும் குழந்தையின் உதை எண்ணிக்கையை குறைக்கும். எனவே, உதைகளின் எண்ணிக்கை குறையும் போது மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்வது நல்லது!
Image Source: pexels-com
Thanks For Reading!