[ad_1] கரோனரி இதய நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா ?

Jun 3, 2024

கரோனரி இதய நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா ?

mukesh M

கரோனரி இதய நோய்

உடலின் சீரான ரத்த ஓட்டம் இடது மற்றும் வலதுப்புறமுள்ள கரோனி தமனிகளால் பராமரிக்கப்டுகிறது. இதயத்திற்கு சரியான ரத்தத்தினை பம்ப் செய்ய அனுப்பாவிடில் உடலிலுள்ள சுழற்சியின் முழு செயல்பாடும் பாதிக்கப்படும். இந்நிலையை தான் கரோனரி இதய நோய் என்று கூறுகிறார்கள்.

Image Source: istock

முக்கிய காரணிகள்

இதயம் சார்ந்த நோய்களுள் முதலிடம் வகிக்கும் கரோனரி இதய நோய் பாதிப்பு இந்தியாவில் அதிகம். உடல் பருமன், குடிப்பழக்கம், மரபணு காரணங்கள், வயது, போன்றவை இந்நோயின் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.

Image Source: pexels-com

முட்டை

அதிக கொலஸ்ட்ரால் முட்டையில் உள்ளது என்றாலும் கொழுப்பினை குறைக்கும் லெசித்தின் உள்ளதால் உடலில் கொழுப்பை கட்டுப்படுத்தி, தேங்குவதை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

Image Source: pexels-com

முட்டை சாப்பிடலாமா?

கரோனரி இதய நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா என்றால் அளவாக சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். வாரத்திற்கு 2-3 முறை வரை முட்டைகளை எடுத்து கொள்ளலாம்.

Image Source: pexels-com

வறுத்த முட்டையை தவிர்க்கவும்

பொதுவாக இதய நோய் உள்ளவர்கள் முட்டைகளை சாலட், சாண்ட்விச் போன்றவைகளில் சேர்த்தும் அவித்தும் சாப்பிடலாம். வறுத்த முட்டைகளை சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பினை அதிகரிக்க இருதய நோய் அபாயங்களை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதால் அதனை தவிர்ப்பது நல்லது.

Image Source: pexels-com

அதிகமாக முட்டை சாப்பிட்டால் என்னவாகும்?

அதிகப்படியான முட்டைகளை சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, தோல் அழற்சி, கல்லீரலில் சிரோசிஸ் ஏற்படுவது, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், ரத்த நாளங்களில் அடைப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

Image Source: istock

என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் ?

கரோனரி இதய நோய் உள்ளவர்கள் விட்டமின்ஸ், மினரல்ஸ், நார்சத்து உள்ளிட்டவை நிறைந்த பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. இவை இதயத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தி கொலஸ்ட்ரால் அளவினை கட்டுப்படுத்துவதோடு திடீர் கார்டியக் அரெஸ்ட் ஏற்படுவதையும் தடுக்கிறது.

Image Source: pexels-com

ஒமேகா-3 அமிலம்

இதய நோய் உள்ளவர்கள் ஒமேகா 3 அமிலம் அதிகமுள்ள மீன் வகைகளை எடுத்து கொள்ளலாம். அதேபோல் புரத சத்து நிறைந்த பட்டானி, சோயா பீன்ஸ், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி போன்ற உணவுகளையும் சாப்பிடலாம்.

Image Source: pexels-com

மருத்துவர்கள் பரிந்துரை

கரோனரி உள்ளிட்ட வெவ்வேறு இதய நோய் உள்ள அனைவருமே தங்கள் உடலுக்கு எந்தெந்த உணவு வகைகள் மற்றும் மருந்துகள், சிகிச்சை முறைகளை மருத்துவர்களை அணுகி பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: நுரையீரல் நலன் காக்கும் ‘குறை-கொழுப்பு’ உணவுகள்!

[ad_2]