[ad_1] கர்நாடகாவின் இந்த '7 அதிசயங்கள்' பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!​

Jul 26, 2024

கர்நாடகாவின் இந்த '7 அதிசயங்கள்' பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!​

Anoj, Samayam Tamil

கர்நாடாக சுற்றுலா ஸ்பாட்ஸ்

வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு நிறைந்துள்ள கர்நாடகா மாநிலத்தின் அதிசயங்களாக கருதப்படும் 7 முக்கிய இடங்களை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

Image Source: instagram-com/mysuruonline

ஹம்பி

ஹம்பி, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். விஜய நகர பேரரசின் கட்டிடக்கலை பார்வையிடக்கூடிய திறந்தவெளி மியூசிம் என்றும் சொல்லலாம். விருப்பாக்ச கோவில், விஜய விட்டல கோயில், தாமரை மஹால், ஜனானா போன்ற முக்கியமான பகுதிகள் உள்ளன

Image Source: unsplash-com

கோல் கும்பாஸ்

தனித்துவமான கட்டிக்கலைக்கு பெயர்பெற்ற இந்த கோல் கும்பாஸை, முகமது அடில் ஷா என்பவர் கட்டியுள்ளார். இங்கு 210 அடி உயரத்தில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய Dome அமைக்கப்பட்டுள்ளது. எவ்வித தூண்களின் ஆதரவு இன்றி அமைந்துள்ள உலகின் 2வது Dome ஆகும்

Image Source: unsplash-com

கோமதேஸ்வரர் சிலை

ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலை, கர்நாடகா மாநிலம் சிரவணபெலகோலாவில் உள்ளது. இதன் உயரம் 57 அடியாகும். இந்த சிலை அமைந்திருக்கும் விந்தியகிரி மலையை அடைய 700 படிகட்டுகளில் ஏற வேண்டும்.

Image Source: instagram-com/travelsiteindia

மைசூர் அரண்மனை

இந்தியாவில் அதிகமானோர் பார்வையிட்ட இடமாக மைசூர் அரண்மனை திகழ்கிறது. இதனை அம்பா விலாஸ் என்றும் அழைப்பார்கள். 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை 4 முறை மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை நாட்களில் இந்த அரண்மனை வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்

Image Source: pexels-com

ஜோக் அருவி

சுமார் 830 அடி உயரத்தில் இருந்து கொட்டும் ஜோக் அருவி, தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த அருவி, ரம்மியமான காட்சிகளை பார்வையாளர்களுக்கு வழங்கக்கூடும்

Image Source: unsplash-com

நேத்ரனி தீவு

முருதேஷ்வரில் அமைந்திருக்கும் இந்த தீவு, கர்நாடாகவில் ஸ்கூபா டைவிங் செய்திட ஏற்ற இடமாகும். இதனை புறா தீவு என்றும் அழைப்பார்கள். தண்ணீருக்கு அடியில் இருக்கும் உலகை கண்டு ரசித்திட நேத்ரனி தீவுக்கு கட்டாயம் செலல் வேண்டும்

Image Source: unsplash-com

ஹிரேபெனக்கல்

இது dolmens போன்ற பெரிய அளவிலான கற்களைப் பயன்படுத்தி செய்யப்பட்ட பழங்கால கட்டுமானங்கள் ஆகும். கர்நாடாகவில் உள்ள இந்த இடம், இந்தியாவின் மிக முக்கியமான megalithic தளமாக உள்ளது. 1 முதல் 10 அடி உயரம் கொண்ட அந்த கற்கள் அசைக்க முடியாதவையாக திகழ்கிறது

Image Source: instagram-com/vatsasunchasers

கர்நாடகா அதிசயங்கள்

வரலாற்று ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்கள் உட்பட அனைத்து வகையான பயணிகளுக்கும் ஏராளமான தனித்துவமான அனுபவங்களை கர்நாடகா வழங்குகிறது. அதிலும் இந்த 7 இடங்களை உங்க ட்ரிப் லிஸ்ட்டில் மறக்காமல் சேர்த்துகொள்ளுங்கள்

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: பாரிஸில் மட்டுமே செய்யக்கூடிய சில விஷயங்கள்!

[ad_2]