[ad_1] கர்நாடகாவில் ஒளிந்திருக்கும் அழகிய தீவு.. ரூ.300 இருந்தா போதும்!

May 2, 2024

கர்நாடகாவில் ஒளிந்திருக்கும் அழகிய தீவு.. ரூ.300 இருந்தா போதும்!

Anoj

செயின்ட் மேரிஸ் தீவு

வெள்ளை மணல் திட்டுகள், உயரமான பனை மரங்கள், பாறைகள், கடல் அலைகள் என இயற்கை அழகு நிறைந்திருக்கும் செயின்ட் மேரிஸ் தீவு பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/mangaloremerijaanofficial

எங்கு இருக்கிறது?

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் மால்பே கடற்கரையில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் இந்த அழகிய தீவு அமைந்துள்ளது

Image Source: instagram-com/sush_0411

எப்படி செல்வது?

இந்த தீவுக்கு செல்வதற்கு முதலில் மால்பே கடற்கரைக்கு செல்ல வேண்டும். உடுப்பியில் இருந்து மால்பே பீச்சிற்கு டாக்ஸி அல்லது பேருந்தில் வந்துவிடலாம். அங்கிருந்து செயின்ட் மெரிஸ் தீவிற்கு படகு வசதி உள்ளது

Image Source: instagram-com/being_ecstatic_in_usa

தீவு வரலாறு

இந்த தீவு, மடகாஸ்கரின் துணை எரிமலைச் செயல்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேபோல், போர்த்துகீசிய ஆய்வாளர் வாஸ்கோடகாமா கோழிக்கோடு செல்வதற்கு முன் இந்த தீவில் கால் பதித்ததாகவும் கூறப்படுகிறது.

Image Source: instagram-com/sush_0411

படகு சவாரி கட்டணம்

இந்த தீவுக்கு மால்பேயில் இருந்து படகு சவாரி செய்திட ரூ.300 வசூலிக்கப்படுகிறது. காலையில் 9.30 முதல் மாலை 5.30 வரை படகு சவாரி இருக்கக்கூடும். கடைசி படகு பற்றிய விவரத்தை முன்பே விசாரித்து கொள்ளுங்கள்

Image Source: instagram-com/manipalthetalk

டால்பின் பார்க்கலாம்

நீங்கள் கடல் வழியாக பயணம் செய்கையில் கடற்பாசிகள், பிராமினி காத்தாடிகள் மற்றும் டால்பின்களை பார்க்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்க செய்யலாம்

Image Source: instagram-com/iamasanchari

நீர் விளையாட்டுக்கள்

இந்த தீவில் பனானா ரைடு போன்ற தண்ணீர் விளையாட்டில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. நீச்சலுக்காக பிரத்யேக இடத்தை ஏற்பாடு செய்து வைத்துள்ளனர். இந்த தீவின் தனித்துவமான நிலப்பரப்பு பீச் ட்ரெக்கிங் வாய்ப்பும் அளிக்கிறது

Image Source: instagram-com/couple_wander

சிறந்த நேரம் எது?

இந்த தீவுக்கு செல்ல அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலக்கட்டம் சிறந்த நேரமாகும். அந்த மாதங்களில் இனிமையான காலநிலையை அனுபவிக்க செய்யலாம். சம்மரில் வெப்பநிலை அளவு அதிகமாக இருக்க செய்யலாம்

Image Source: instagram-com/krshna_

பார்க்க வேண்டிய இடங்கள்

மால்பே கடற்கரையில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் தர்யாபஹதுர்கர் கோட்டையும், 800 மீட்டரில் வடபண்டேஸ்வரா கோயிலும் உள்ளது. இவை மிகவும் பாப்புலரான சுற்றுலா தளங்களாகும். இதுதவிர, மால்பே கடற்கரையிலும் தரமான நேரத்தை செலவிடலாம்

Image Source: instagram-com/premm_anand

Thanks For Reading!

Next: உலகின் மிக சிறந்த வாழ்க்கை தரத்தை கொண்ட நாடுகள்

[ad_2]