[ad_1] கர்நாடகாவில் 'ட்ரெக்கிங்' செல்ல சிறந்த இடம் எது தெரியுமா?

Jul 1, 2024

கர்நாடகாவில் 'ட்ரெக்கிங்' செல்ல சிறந்த இடம் எது தெரியுமா?

S Anoj

ட்ரெக்கிங் ஸ்பாட்

மழைக்காலத்தில் ட்ரெக்கிங் செல்வது சாகச ஆர்வலர்களின் விருப்பமான பொழுதுபோக்கு ஆகும். காலநிலை இனிமையாக இருப்பதோடு, அடிக்கடி மழை பெய்வதால் ட்ரெக்கிங் பயணமும் சவால் நிறைந்தததாக இருக்கக்கூடும். கர்நாடகாவில் ட்ரெக்கிங் செல்ல சிறந்த இடம் எது என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com

குதுரேமுக் ட்ரெக்கிங்

இது கர்நாடகாவின் 2வது உயரமான சிகரமாகும். அதன் மொத்த உயரம் 6,207 அடி ஆகும். அடர்ந்த காடுகள், புல்வெளிகள், நீரோடைகள், வனவிலங்குகள் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளை மழைக்கால ட்ரெக்கிங்கில் நீங்கள் கண்டு ரசிக்கலாம்

Image Source: instagram-com/abhitrip-in

மகலிதுர்கா ட்ரெக்கிங்

மகலிதுர்கா, பெங்களூருவிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த இடத்திற்கு செல்ல 2 மணி நேரம் ஆகக்கூடும். இந்த மலையின் உச்சியில் அமகலிதுர்கா கோட்டை உள்ளது. அது கட்டாயம் ஆராய வேண்டிய ஸ்பாட்டாகும்

Image Source: instagram-com/shampa_mandal

நேத்ராவதி ட்ரெக்கிங்

இந்த ட்ரெக்கிங் பயணத்தில் குதுரேமுக் வனப்பகுதி மற்றும் பள்ளத்தாக்கின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை காணலாம். மழைக்காலத்தில் பசுமையான காடுகள், நீர் வரத்து அதிகமான அருவிகளையும் காண முடியும். இது கர்நாடகா வாசிகளின் ஃபேவரைட் ட்ரெக்கிங் ஸ்பாட் ஆகும்

Image Source: instagram-com/karnataka_hikes

கொடசாத்ரி

இந்த மலைப்பகுதி, மூகாம்பிகை வனவிலங்கு சரணாலயத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஷார்ட் ட்ரெக்கிங் விரும்புவோருக்கு ஏற்ற இடமாகும். மழைக்காலத்தில் மலையின் உச்சியில் இருந்து சிறந்த காட்சியை காண முடியும்

Image Source: instagram-com/coimbatore_adventure_club

தடியாண்டமோல் ட்ரெக்கிங்

மலை ஏறுபவர்களின் சொர்க்கமாக கூர்க்கின் தடியாண்டமோல் சிகரம் திகழ்கிறது. இந்த மிதமான மலையேற்ற பயணத்தில், பசுமையான புல்வெளி, தண்ணீர் கொட்டும் அருவிகள் மற்றும் அழகிய பள்ளத்தாக்குகளை கண்டு ரசிக்க முடியும்

Image Source: instagram-com/hpy_soul_ks

Ettina Bhuja ட்ரெக்கிங்

சிக்மகளூரில் 4265 அடி உயரமுள்ள எட்டின பூஜா, இயற்கை ஆர்வலர்களுக்கு சிறப்பான காட்சியை வழங்குகிறது. அடர்ந்த காடுகள் நடுவே பயணித்து அதன் உச்சியை அடைய வேண்டும்

Image Source: instagram-com/sanjutotagi55

ஆகும்பே ட்ரெக்கிங்

இது தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். இந்த ட்ரெக்கிங் பயணம் சற்று கடினமானதாக இருக்கக்கூடும். ஆனால், பல அரிய வகை விலங்குகளை காண முடியும்

Image Source: instagram-com/rashmi_gangarangaiah

Gangadikal ட்ரெக்கிங்

இந்த மலைச்சிகரம் 4,806 அடி உயரத்தில் உள்ளது. அதன் உச்சியில் இருந்து குதுரேமுக் காடுகள், லக்யா அணையின் காயல் மற்றும் குதுரேமுக் அணையை காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கக்கூடும்

Image Source: instagram-com/nirupamagovardhan

Thanks For Reading!

Next: ஹைவேயில் வைக்கப்பட்டுள்ள போர்டுகள் பச்சை நிறத்தில் இருக்க காரணம் என்ன ?

[ad_2]