[ad_1] கர்நாடகாவில் மறைந்திருக்கும் சொர்க்கம்.. கோகர்ணா பற்றி தெரியுமா?

May 27, 2024

கர்நாடகாவில் மறைந்திருக்கும் சொர்க்கம்.. கோகர்ணா பற்றி தெரியுமா?

Anoj

கோகர்ணா சுற்றுலா

கர்நாடகா வாசிகளின் சொர்க்க பூமியாக திகழும் கோகர்ணாவில் ஏராளமான அழகிய கடற்கரைகள் உள்ளன. ஒவ்வொரு இடமும் தனித்துவமான சிறப்பை கொண்டுள்ளது. அங்கு என்ன மாதிரியான செயலில் ஈடுபடலாம் என்பதை இங்கு காணலாம்

Image Source: instagram-com/sushmasris

பீச் ட்ரெக்கிங்

பீச் ட்ரெக்கிங் ஆசைப்படுபவர்களுக்கு கோகர்ணா ஏற்ற ஸ்பாட்டாகும். Belekan பீச்சில் இருந்து ஓம் பீச் வரை ட்ரெக்கிங் பயணம் மேற்கொள்ளலாம். இந்த பயணத்தின் போது அழகிய புகைப்படங்களை கேப்சர் செய்வதோடு இரவு நேரத்தில் முகாமிட்டு தங்கக்கூடிய வாய்ப்பும் கிடைக்கக்கூடும்

Image Source: instagram-com/togedr

பனானா படகு சவாரி

கோகர்ணாவின் ஓம் பீச்சில் பனானா படகு சவாரியில் சுற்றுலா வாசிகள் ஈடுபட செய்யலாம். அவற்றை முதல்முறையாக முயற்சிக்கும் பட்சத்தில், மிகவும் த்ரில்லிங்காக இருக்கக்கூடும்

Image Source: instagram-com/travelingaja-idn

நீல நிற கடற்கரை

கர்நாடகாவில் நீல நிற கடற்கரையை பார்க்கக்கூடிய வாய்ப்பு Nirvana பீச்சில் கிடைக்கக்கூடும். அங்கு இரவு நேரத்தில் செல்கையில், phytoplankton காரணமாக கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னக்கூடும்

Image Source: instagram-com/ocean-encounters

நீர் சாகச விளையாட்டுகள்

கோகர்ணா நகரம், கோவாவின் மினி வெர்ஷனாக கருதப்படுகிறது. அங்குள்ள கடற்கரைகளில் டால்பின் வாட்சிங், ஜெட் ஸ்கீயிங், கயாகிங் போன்ற தண்ணீர் சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

Image Source: unsplash-com

விபூதி நீர்வீழ்ச்சி

இது கோகர்ணா அருகே மறைந்திருக்கும் ரத்தினமாகும். சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது. அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சியை உள்ளூர் வாசிகள் Mabagi என்றும் அழைக்கின்றனர்

Image Source: -instagram-com/darshan-mshah

ஆன்மீக பயணம்

கோகர்ணாவில் கடற்கரைகள் மட்டுமின்றி ஏராளமான கோயில்களும் உள்ளது. மகாபலேஸ்வரர் கோயில், மஹா கணபதி கோயில் மற்றும் Koti Teertha ஆகியவை சுற்றுலா வாசிகள் அதிகமாக செல்லக்கூடிய இடங்களாகும்

Image Source: instagram-com/viswanatkr01

எப்படி செல்வது?

கோகர்ணாவுக்கு கர்நாடகாவில் இருந்து சாலை மற்றும் ரயில் போக்குவரத்தில் எளிதாக சென்றுவிடலாம். ரயிலில் செல்லும் பட்சத்தில், Ankola ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் கோகர்ணா உள்ளது

Image Source: unsplash-com

சிறந்த நேரம் எது?

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில், கோகர்ணா இனிமையான காலநிலையை கொண்டிருக்கும். ஆனால், கோடை காலத்தில் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கக்கூடும்.

Image Source: instagram-com/sonal_dewangan26

Thanks For Reading!

Next: ராஜஸ்தானின் அடையாள சின்னம் ஆம்பர் கோட்டை பற்றிய சில சுவாரசிய தகவல்கள்!

[ad_2]