[ad_1] கர்நாடகாவில் மறைந்திருக்கும் 'கருப்பு மணல்' கடற்கரை பற்றி தெரியுமா?

Aug 9, 2024

கர்நாடகாவில் மறைந்திருக்கும் 'கருப்பு மணல்' கடற்கரை பற்றி தெரியுமா?

Anoj, Samayam Tamil

தில்மதி கடற்கரை

கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கடற்கரையின் மணல் கருப்பு எள் போல் காட்சியளிக்கக்கூடும். சுற்றுலா பயணிகளை கவரும் இந்த கருப்பு மணல் கடற்கரை பற்றிய கூடுதல் தகவல்களை இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/vishnumurthy_hegde

எங்கு இருக்கிறது?

உத்தர கன்னடா மாவட்டத்தில் மஜாலி கிராமத்தில் தான் இந்த கடற்கரை அமைந்துள்ளது. நீங்கள் பெங்களூருவில் இருந்து கார்வாருக்கு பேருந்தில் சென்றுவிட்டால், அங்கிருந்து உள்ளூர் போக்குவரத்தில் எளிதாக கடற்கரைக்கு செல்லலாம்

Image Source: instagram-com/journey_with_chirag

1 கி.மீ ட்ரெக்கிங்

மஜாலி கிராமத்தில் இருந்து சுமார் 1 கி.மீ ட்ரெக்கிங் பயணத்தில் ஈடுபட்டால் மட்டுமே இந்த கருப்பு வைரத்தை காண முடியும். சிறிய ஓடையை கடந்து, சிறிய மலையில் ஏறி தில்மதி கடற்கரையை அடையலாம். மழைக்காலத்தில் இந்த பயணம் சற்று கடினமாக இருக்கக்கூடும்

Image Source: instagram-com/karnataka_focus

பெயர் காரணம்?

கொங்கனி மொழியில் தில்லு என்றால் எள் விதைகள் என்றும், மட்டி என்றால் மண் என்றும் அர்த்தமாகும். தில்லுமட்டி எனும் வார்த்தை காலப்போக்கில் தில்மதியாக மாறி முக்கியமான சுற்றுலா தளமாக திகழ்கிறது

Image Source: instagram-com/karwar-kashmir-of-karnataka

கருப்பு மணல் உருவானது எப்படி?

தில்மதி கடற்கரை, பாசால்டிக் என்ற பாறைகளால் சூழப்பட்டிருப்பதால், மணல் இயற்கையாகவே கருப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு மணல் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கக்கூடும்

Image Source: instagram-com/ranjitakrishn

அமைதியான கடற்கரை

பிற கடற்கரையுடன் ஒப்பிடுகையில் இங்கு மக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருக்கக்கூடும். இது அமைதியான சூழலில் கடல் அழகை ரசித்தப்படி துணையுடன் நேரத்தை செலவிட சிறந்த இடமாகும்

Image Source: instagram-com/sanihakmthushara

சூரிய அஸ்தமனம்

சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்க சிறந்த இடமாக கருதப்படுகிறது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சூரியன் மறையும் காட்சியை கண்டு ரசிக்கவே இங்கு வருவதாக கூறப்படுகிறது

Image Source: instagram-com/ranjitakrishn

மீன் பிடித்தல்

கடல் அழகை ரசிப்பதை தாண்டி உள்ளூர் மக்களுடன் சேர்த்து மீன் பிடித்தல் செயலிலும் நீங்கள் ஈடுபட செய்யலாம். அதேபோல், இந்த பாறைகள் அல்லது மலைப்பகுதி அருகே முகாமிட்டு அற்புதமான இரவு பொழுதையும் அனுபவிக்கலாம்

Image Source: pexels-com

பார்க்க வேண்டிய இடங்கள்

தில்மதி கடற்கரையில் இருந்து சுமார் 20 அல்லது 25 கிமீ தொலைவில் கர்வார் மற்றும் தேவ்பாக் பீச் அமைந்துள்ளது. அங்கு ஏராளமான தண்ணீர் சாகசங்களில் ஈடுபட செய்யலாம். இதுதவிர, அதன் அருகே வார்ஷிப் மியூசியம், Sadashivgad வனவிலங்கு சரணாலயம் உள்ளது

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: மாலத்தீவு பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!

[ad_2]