[ad_1] கர்நாடகா சிவப்பு நிற பலா பழ சாகுபடி குறித்த தகவல்கள்

கர்நாடகா சிவப்பு நிற பலா பழ சாகுபடி குறித்த தகவல்கள்

Jul 29, 2024

By: Nivetha

பலாப்பழம்

பலாப்பழம் பிடிக்காத நபர்கள் இருப்பது குறைவே, முக்கனிகளுள் ஒன்றான இந்த பலாப்பழம் தேனை போன்ற சுவை கொண்டிருக்கும். கோடைக்காலத்தில் இப்பழங்கள் அதிகளவு விற்பனை செய்யப்படும். இந்நிலையில், சமீபகாலமாக கர்நாடகா சிவப்பு நிற பலாப்பழம் என்னும் ரகம் சந்தையில் பார்க்க முடிகிறது.

Image Source: instagram

கர்நாடகா சிவப்பு நிற பலாப்பழ சாகுபடி

அண்மையில் பிரபலமாக பேசப்படும் கர்நாடகா சிவப்பு நிற பலாப்பழ சாகுபடி குறித்து செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம்.

Image Source: instagram

சாகுபடி

நம்மூர் மண்ணில் கோடைக்காலம் மற்றும் மழைக்காலத்திற்கு ஏற்றவாறு அதிகளவு குளிர் மற்றும் வறட்சி மிகுந்த பிரதேசங்களில் விளையக்கூடிய செடி மற்றும் மரங்களை சாகுபடி செய்யலாம். அதன்படி, இந்த கர்நாடகா சிவப்பு நிற பலாப்பழத்தையும் நம்மூர் மண்ணில் சாகுபடி செய்வது சாத்தியமே.

Image Source: istock

விளைச்சல்

இந்த வகை பலா மரங்களை இங்கு வளர்க்கும் பட்சத்தில் மூன்று ஆண்டுகளில் இது நல்ல விளைச்சலை கொடுக்கும் என்று அந்த விவசாயி கூறுகிறார். ஆனால் இந்த செடிகளை தண்ணீர் தேங்காதவாறு மேடான பகுதிகளில் தான் நடவு செய்ய வேண்டும்.

Image Source: pixabay

சேதம்

ஏனெனில் பள்ளமான பகுதிகளில் இந்த செடிகளை நடவு செய்யும் பட்சத்தில் தண்ணீர் தேங்கினால் செடிகள் முற்றிலும் சேதமாகி விடுமாம். அதன்படி, தண்ணீர் தேங்காத அனைத்து வித நிலங்கள், களர் உவர் நிலங்களில் இந்த பலாப்பழ செடி நடவு செய்ய ஏற்றதாகும்.

Image Source: istock

கரோட்டின்

இந்த புதுவித சிவப்பு பலாப்பழத்தில் கரோட்டின் அதிகளவு நிறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனை சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லதாம், கண் சார்ந்த பிரச்சனைகளை இது குணப்படுத்த கூடும் என்றும் அந்த விவசாயி கூறியுள்ளார்.

Image Source: istock

வரவேற்பு

கர்நாடகா சிவப்பு நிற பலாப்பழத்திற்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை சாகுபடி செய்தால் நிச்சயம் அதிகளவு வருவாய் ஈட்ட முடியும். இதன் சிவப்பு நிற சுளைகள் பார்ப்போரை ஈர்க்கிறது. மஞ்சள் நிற பலாப்பழங்களை விட இது அதிகளவில் விற்பனையாகும்.

Image Source: istock

'சித்து' ரக பலாப்பழம்

கர்நாடகா சிவப்பு நிற பலாப்பழத்தை 'சித்து' என்றும் குறிப்பிடுகிறார்கள். இளம்சிவப்பு நிறத்தில் காணப்படும் இப்பழத்தில் மஞ்சள் நிற பலாப்பழத்தை விட அதிகளவு சதை பற்று இருக்கும் என்று கூறுகிறார்கள்.

Image Source: Samayam Tamil

வர்த்தகம்

இந்நிலையில், வர்த்தக ரீதியாக சாகுபடி செய்ய வேண்டும் என்று நினைக்கும் விவசாயிகள் தாராளமாக இம்மரத்தை நடவு செய்யலாம், நஷ்டம் ஏற்படாது. தமிழ்நாட்டில் இது போன்ற புதுவித பழங்கள் நிச்சயம் மக்களால் அதிகளவு வாங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: istock

Thanks For Reading!

Next: 'அதிர்ஷ்ட பெண் சிண்ட்ரோம்' மனநிலை கொடுக்கும் நன்மைகள்

[ad_2]