[ad_1] கர்நாடகா ஸ்பெஷல் பஸ்ஸாரு செய்வது எப்படி?

Jul 13, 2024

கர்நாடகா ஸ்பெஷல் பஸ்ஸாரு செய்வது எப்படி?

mukesh M

பஸ்ஸாரு!

கர்நாடக மாநில மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான பஸ்ஸாரு செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

முருங்கை கீரை - 1 கட்டு | துவரம் பருப்பு - 1 கைப்பிடி | மசூர் பருப்பு - 1 கைப்பிடி | மஞ்சள் - 1 ஸ்பூன் | உப்பு - 1 ஸ்பூன் | வெங்காயம் - 1 | பூண்டு பல் - 6 | தேங்காய் - ¼ மூடி | கொத்தமல்லி - 1 கொத்து | மிளகு - 5

Image Source: istock

தேவையான பொருட்கள்!

புளி - நெல்லிக்காய் அளவு | காய்ந்த மிளகாய் - 4 | மல்லி பொடி - 1 ஸ்பூன் | மிளகாய் பொடி - 1 ஸ்பூன் | சீரகம் - 1 ஸ்பூன் | எண்ணெய் - 2 ஸ்பூன் | கடுகு - ¼ ஸ்பூன் | கறிவேப்பிலை - 1 கொத்து

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட முருங்கை கீரையை சுத்தம் செய்து குக்கர் ஒன்றில் சேர்க்கவும். பின் இதனுடன் பருப்பு வகைகள், மஞ்சள், உப்பு மற்றும் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் வர வேக வைத்து இறக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

இதனிடையே எடுத்துக்கொண்ட வெங்காயம், தேங்காயம், பூண்டு, கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கி மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்க்கவும். பின் இதனுடன் மிளகு, புளி, காந்தய மிளகாய் ஆகியவற்றையும் சேர்க்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 3

இறுதியாக இதனுடன் மிளகாய் பொடி, மல்லி பொடி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள மசாலா பொடி ரெடி!

Image Source: istock

செய்முறை படி - 4

தற்போது குக்கரில் வேக வைத்த கீரை சேர்மத்தை நன்கு மசித்து, அகன்ற பாத்திரம் ஒன்றுக்கு மாற்றி கொதிக்க வைக்கவும். இதன் போது இதனுடன் மிக்ஸியில் அரைத்த மசாலா மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 5

இதனிடையே தாளிப்பு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், உளுந்து, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

Image Source: istock

பஸ்ஸாரு ரெடி!

பின் இந்த தாளிப்பினை அடுப்பில் கொதிகும் குழம்பில் சேர்த்து கிளறி, அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான பஸ்ஸாரு ரெடி. சுட சுட வடித்து எடுத்த சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்!

Image Source: istock

Thanks For Reading!

Next: திண்ண திண்ண திகட்டாத ‘வேர்க்கடலை பணியாரம்’!

[ad_2]