May 10, 2024
By: mukesh Mகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஒரு ஊட்டமாக மெக்னீசியம் பார்க்கப்படும் நிலையில், இது எந்தெந்த வகையில் உதவுகிறது? கர்ப்ப காலத்தில் மெக்னீசியத்தின் அவசியம் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
கர்ப்பிணி பெண்களுக்கு தசை சுருக்கங்கள் மற்றும் கால் வீக்கம் போன்றவை பொதுவான பிரச்சனைகள் ஆகும். மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் அது தசைகளை தளர்த்தி, இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
Image Source: istock
உடலின் மெக்னீசியத்தின் அளவு சமநிலையில் இருக்கும் போது குழந்தை குறை பிரசவத்தில் பிறக்கும் அபாயம் குறைவு என அறியப்பட்டுள்ளது. மெக்னீசியம் குறைப்பாடு ஒரு வகையில் குறை பிரசவத்திற்கு வழி வகுக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.
Image Source: istock
மெக்னீசிய சத்து குறைபாடு குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்புக்கு வழிவகுக்கிறது. மெக்னீசியம் குறைபாடு காரணமாக தூக்கமின்மை பிரச்சனைகள் ஏற்படலாம்.
Image Source: istock
பொதுவாக கர்ப்ப காலங்களில் பெண்கள் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவதிப்படுவார்கள். மெக்னீசியத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இது போன்ற தசைப்பிடிப்புகள் மற்றும் வலிகளை சரி செய்ய உதவுகிறது.
Image Source: istock
சில பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் குறைந்தது ஐந்து மாதம் வரை வாந்தி தொல்லை இருக்கலாம். மெக்னீசியம் சார்ந்த உணவுகளை உட்கொள்ளல் வாந்தி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.
Image Source: istock
மன அழுத்தம், பதட்டம் போன்ற பொதுவான கர்ப்பகால பாதிப்புகளை சரி செய்ய மெக்னீசியம் உதவுகிறது.
Image Source: istock
ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் மெக்னீசியம் மிகவும் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் சரியான அளவில் மெக்னீசியம் இருப்பது ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.
Image Source: pexels-com
கீரை, அவகேடோ, பாதாம், முந்திரி, வேர்க்கடலை, கருப்பு பீன்ஸ், டார்க் சாக்லேட் போன்றவற்றில் மெக்னீஷிய சத்து நிறைந்து காணப்படுகிறது. உணவில் சேர்த்து கொள்வதற்கு முன் உங்கள் மகப்பேறு மருத்துவரை கலந்தலோசித்து பின்னர் சேர்த்துக்கொள்ளவும்.
Image Source: istock
Thanks For Reading!