May 22, 2024
By: mukesh M80 - 90% கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் பிரச்சனையாக குறை இரத்த அழுத்த பிரச்சனை பார்க்கப்படும் நிலையில், கர்ப்பிணிகளை இந்த இரத்த அழுத்த பிரச்சனை தாக்குவது ஏன்? இதன் ஆபத்துகள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: pexels-com
கர்ப்ப காலத்தின் போது பெண்கள் உடலில் உண்டாகும் நீரிழப்பு, இரத்த சோகை, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை இரத்த அழுத்தம் உண்டாவதன் முக்கிய காரணங்களாக உள்ளன.
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் இந்த குறை இரத்த அழுத்த பிரச்சனை ஆனது கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். குறிப்பாக, எடை குறைவு உள்ளிட்ட பிரச்சனைக்கு வழிவகுக்கும்!
Image Source: istock
கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் இந்த குறை இரத்த அழுத்த பிரச்சனை ஆனது குறைமாத பிரசவம், எடை குறைவான குழந்தை உள்ளிட்ட பிரசவகால சிக்கலுக்கு வழிவகுக்க கூடும்!
Image Source: istock
கர்ப்ப காலத்தில் உண்டாகும் இந்த குறை இரத்த அழுத்த பிரச்சனையை ஒரு சில அறிகுறிகள் மூலம் நாம் கண்டறியலாம். அந்த வகையில் கர்ப்பகாலத்தில் உண்டாகும் மங்களான பார்வை, குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் Low BP-ன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது!
Image Source: istock
கர்ப்ப காலத்தில் ஆற்றல் இழப்பு, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் இயல்பான ஒன்று ஆகும். இருப்பினும் இந்த குறை இரத்த அழுத்த பிரச்சனை உள்ள பெண்களுக்கு இது சற்று அதிகமாகவே இருக்கும்!
Image Source: istock
உள்ளங்கை, பாதம், முகம் உள்ளிட்ட பகுதியில் தோல் உரிதல், அளவுக்கு மிகுதியாக வியர்த்தல் - குளிர் காய்ச்சல் அடிப்பது போன்றவையும் இந்த குறை இரத்த அழுத்த பிரச்சனையின் முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது!
Image Source: istock
கர்ப்ப காலத்தில் உண்டாகும் இந்த ‘குறை இரத்த அழுத்தம்’ பிரச்சனையை சமாளிக்க, ஆரோக்கிய உணவு வழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம். அதேநேரம், புகையிலை - மதுபானம் போன்ற போதை வஸ்துக்களை தவிர்த்து, ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதும் அவசியம்!
Image Source: istock
கர்ப்ப காலத்தில் உண்டாகும் குறை இரத்த அழுத்த பிரச்சனை ஆனது அரிதான சமயங்களில் கருச்சிதைவு போன்ற ஆபத்துக்களை உண்டாக்க கூடும். எனவே, முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்!
Image Source: istock
Thanks For Reading!