[ad_1] கர்ப்ப காலத்தின் 5-வது மாதம் - பெண்கள் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிட கூடாது?

கர்ப்ப காலத்தின் 5-வது மாதம் - பெண்கள் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிட கூடாது?

Aug 6, 2024

By: mukesh M

5-ஆம் மாத டயட் வழக்கம்!

கர்ப்ப காலத்தில் 2-வது அல்லது 3-வது மாதத்திற்கு பிறகு குழந்தை வளரும்போது தாய்மார்களுக்கு பசியும் அதிகமாக ஏற்படும். இதனால் அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அந்த வரிசையில் 5-வது மாத கர்ப்ப கால உணவை பற்றி இங்கு பார்க்கலாம்.

Image Source: istock

பால்

கர்ப்பிணி பெண்கள் அவர்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். மலச்சிக்கலை தவிர்க்கவும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருடன் கூடுதலாக தினமும் குறைந்தது இரண்டு கிளாஸ் பால் உட்கொள்வது உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் சத்தை வழங்க உதவுகிறது.

Image Source: pexels-com

புரதம் நிறைந்த உணவுகள்!

குழந்தையின் உடல் வளர்ச்சி சரியான பாதையில் இருப்பதை உறுதி செய்ய புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். முட்டை, கோழி இறைச்சி, பருப்பு வகைகள், தானியங்கள், மத்தி மீன், பனீர் போன்ற உணவுகளை சாப்பிட்டு வரலாம்.

Image Source: istock

காய்கறி சாலட்!

முட்டைகோஸ், கேரட், தக்காளி, பீட்ரூட் போன்ற பச்சை காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் சாலடுகள் உங்கள் உணவில் நார்ச்சத்துக்களை சேர்க்கும் சிறந்த வழியாகும். கர்ப்பிணி பெண்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் நார்ச்சத்து இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

Image Source: istock

பழங்கள்!

பொதுவாகவே பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அந்த வரிசையில் ஆப்பிள் பேரிக்காய் வாழைப்பழம் கிவி ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற வைட்டமின் சி மற்றும் செலினியம் நிறைந்த பழங்களை கர்ப்ப காலத்தில் சாப்பிட்டு வரலாம்.

Image Source: istock

பச்சை இலை காய்கறிகள்!

குழந்தையின் வளர்ச்சிக்கு இரும்பு சத்து மிகவும் முக்கியம். இந்த நிலையில் கர்ப்பிணி பெண்கள் உடலில் இரும்புச் சத்து தேவையை பூர்த்தி செய்ய கீரை முட்டைகோஸ் ப்ரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

Image Source: istock

என்ன சாப்பிட கூடாது?

ஐந்தாவது மாத கர்ப்ப கால உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய சில உணவுகளை பார்த்தோம். தற்போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

Image Source: istock

குளிர்பானங்கள்!

கார்பனேற்றப்பட்ட பானங்களில் காஃபின் சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கலோரிகள் அதிகம் உள்ளன. இது போன்ற குளிர்பானங்களை குடிப்பதற்கு பதிலாக எலுமிச்சை ஜூஸ் அல்லது பழச்சாறுகளை குடித்து வரலாம்.

Image Source: istock

பப்பாளி, அன்னாசிப்பழம்!

பப்பாளி மற்றும் அன்னாசி பழம் கர்ப்பிணி பெண்களுக்கு கருப்பை சுருக்கத்தை தூண்டுவதாக அறியப்படுகிறது. இது கருசிதைவுக்கு வழி வகுக்கக்கூடும். இதனால் பப்பாளி மற்றும் அன்னாசி பழத்தை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.

Image Source: istock

Thanks For Reading!

Next: வலிகள் இல்லையேல் வாழ்வில் வெற்றி இல்லை

[ad_2]