Aug 2, 2024
By: mukesh Mகர்ப்ப காலத்தில் உண்டாகும் சளி, காய்ச்சல் பிரச்சனைகளை விரட்ட உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள் ஒரு சிலவற்றை குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் சளி, காய்ச்சல் பிரச்சனைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடே மிக முக்கிய காரணமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தையின் நலன் காக்க, வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை கட்டமைப்பது அவசியம்!
Image Source: istock
கர்ப்ப காலத்தில் வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை கட்டமைக்கும் வகையில், ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்துங்கள். அந்த வகையில் வைட்டமின் சி, ஏ, டி, ஈ, இரும்பு, செலினியம், போலட் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்!
Image Source: istock
நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாட்டால் உண்டாகும் சளி, காய்ச்சல் பிரச்சனையை தவிர்க்க உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் போதுமான அளவு நீர், பழச்சாறு, சூப் வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள்!
Image Source: istock
மட்டன் சூப் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதோடு, வலுவான எலும்புகள் மற்றும் மூட்டுகளை பெற உதவுகிறது. அதேநேரம் சிக்கன் சூப், வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உண்டாக்குகிறது. எனவே, இந்த 2 வகை சூப்களையும் பெண்கள் எடுத்துக்கொள்ளலாம்!
Image Source: istock
அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படும் இந்த அன்னாசி பழச்சாறு ஆனது, கிருமி தொற்றால் உண்டாகும் சளி, காய்ச்சல் பிரச்சனைகளை எதிர்த்து போராடுவதோடு, தொண்டை வலி - எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது!
Image Source: istock
ஆன்டி பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு பண்பு நிறைந்து காணப்படும் இந்த இஞ்சியின் நுகர்வு வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உதவுகிறது. எனவே, இந்த இஞ்சியை டீ வடிவில் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளலாம்!
Image Source: pexels-com
இஞ்சியை போன்றே ஆன்டி ஆக்ஸிடன்கள், அழற்சி எதிர்ப்பு பண்பு நிறைந்த ஒரு உணவு பொருளாக மஞ்சள் பார்க்கப்படுகிறது. இந்த மஞ்சளில் காணப்படும் ஆன்டி பாக்டீரியல் பண்பு, சளி - காய்ச்சல் பிரச்சனைகளை தடுக்கிறது!
Image Source: istock
ஆரோக்கியமான உணவு வழக்கம், நீரேற்றம் ஆகியவற்றுடன் போதுமான ஓய்வும் கர்ப்பிணிகளுக்கு அவசியம். வலுவான நோய் எதிர்பு மண்டலத்தை கட்டமைப்பதில் ‘ஓய்வு’ மிக முக்கிய பங்கு வகிக்கிறது!
Image Source: istock
Thanks For Reading!