Jul 22, 2024
கர்ப்ப காலத்தில் சில பெண்கள் தங்கள் கன்னங்கள் ரோஜாப்பூ போன்று சிவப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். மேலும், சருமம் பிரகாசமாக இருப்பதாகவும் கூறுவார்கள். அதற்கு பின்னால் இருக்கும் காரணங்களை இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல உடலியல் மாற்றங்கள் சருமப் பொலிவிற்கு காரணமாக அமைகிறது. ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடல் செயல்பாடுகள் அதிகரித்தல் இவற்றால் சருமத்தில் மாற்றங்கள் உண்டாகுகிறது
Image Source: istock
கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் ரத்த அளவானது 50% வரை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கன்னங்கள் ரோஜா நிறத்தை பெறுகின்றன. இதன் மூலம் ஒட்டுமொத்த பளபளப்பை நீங்கள் பெறலாம்.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். இதனால் சருமம் பொலிவானதாக மாறும்.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்களால் சருமத்தில் உள்ள செபாசியஸ் சுரப்பிகள் தூண்டப்பட்டு அதிகளவு எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இந்த இயற்கை எண்ணெய் சருமத்தை பளபளப்பாக வைக்கிறது.
Image Source: istock
கர்ப்ப கால சருமப் பொலிவானது இரண்டாவது மூன்றாவது மாதங்களில் தொடங்குகிறது. இந்த நேரத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ரத்த ஓட்டம் அதிகரிப்பால் சருமப் பொலிவு ஏற்படுகிறது. இருப்பினும் இது மற்றவர்களின் உடல்நிலையை பொறுத்த மாறுபடலாம்.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் உணவு முறையில் கூடுதல் கவனம செலுத்துகிறோம். போதுமான நீர்ச்சத்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் சீரான உணவை எடுத்தல் கொள்ளுதல் ஆகியவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் உள்ள பெண்களுக்கென தனித்துவமான சரும பராமரிப்பு பொருட்கள் உள்ளன. ரசாயன தயாரிப்புகளை தவிர்த்துவிட்டு இயற்கை தயாரிப்புகளை உபயோகிப்பதும் சரும அழகை மேம்படுத்த உதவுகிறது.
Image Source: istock
கர்ப்ப காலம் என்பது மகிழ்ச்சியான கால கட்டமாகும். ஒரு குழந்தையின் வரவு மன அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் சருமப் பொலிவு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!