[ad_1] கர்ப்ப காலத்தில் ‘சோடா’ பருகுவது நல்லதா? கெட்டதா?

May 20, 2024

கர்ப்ப காலத்தில் ‘சோடா’ பருகுவது நல்லதா? கெட்டதா?

mukesh M

கர்ப்ப காலத்தில் சோடா?

அனைத்து வயதினரையும் ஈர்க்கும் ஒரு பானமாக சோடாக்கள் பார்க்கப்படும் நிலையில், கார்பனேற்றம் செய்யப்பட்ட இந்த பானத்தை கர்ப்பிணிகள் பருகுவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: istock

நிபுணர்கள் கூறுவது என்ன?

கார்பனேற்றம் செய்யப்பட்ட இந்த பானத்தில் அளவுக்கு மிகுதியான சர்க்கரை, காஃபின் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை, கர்ப கால நீரிழிவுக்கு வழிவகுக்கும் என்பதால் இதனை கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது!

Image Source: istock

குழந்தை வளர்ச்சியை பாதிக்கும்!

கார்பனேற்றம் செய்யப்பட்ட இந்த சோடாவில் காணப்படும் காஃபின் உள்ளடக்கம் ஆனது, கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்க கூடும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Image Source: istock

உடல் எடை அதிகரிக்கும்!

சோடாவின் செயற்கை சுவையூட்டிகளின் உள்ளடக்கம் ஆனது, இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு, எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். இந்த உடல் எடை ஆனது பிரசவகால பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்!

Image Source: istock

காலை சுகவீன பிரச்சனை!

ஆய்வுகளின் படி இந்த சோடாவின் நுகர்வு ஆனது நீரிழப்புக்கு வழிவகுக்க கூடும். கர்ப்ப காலத்தில் உண்டாகும் இந்த நீரிழப்பு ஆனது, கர்ப்பிணிகளின் காலை சுகவீன பிரச்சனைக்கும் வழிவகுக்க கூடும்!

Image Source: istock

முதுகு வலி பிரச்சனை!

சோடா-க்களின் நுகர்வு ஆனது, கால்சியம் உறிஞ்சுதலை பாதிக்கிறது. அந்த வகையில் இது கால்சியம் தட்டுப்பாட்டை உண்டாக்கி, எலும்புகளின் வலுவிழப்புக்கு வழிவகுக்கிறது.

Image Source: istock

குழந்தையின் உடல் பருமன்!

கர்ப்ப காலத்தில் பெண்கள் சோடா பருகுவது அவர்களின் உடல் எடையை அதிகரிப்பதோடு, கருவில் வளரும் குழந்தையின் உடல் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும்!

Image Source: istock

வயிற்று உப்புசம்!

கர்ப்ப காலத்தில் இந்த சோடா பருகுவது ஒரு சில பெண்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை உண்டாக்குவதோடு, வயிற்று உப்புசம் -அடிவயிற்று பிடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது!

Image Source: istock

சோடாவுக்கு மாற்று உண்டா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த சோடா பருகுவதை தவிர்த்து, ஊட்டச்சத்து மிக்க பழச்சாறு, மூலிகை பானங்கள், மூலிகை தேநீர் போன்றவற்றை பருகலாம்!

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: அதிக வயது வித்தியாசத்தில் 'திருமணம்' செய்வதன் நன்மைகளும், தீமைகளும்!

[ad_2]