May 11, 2024
By: Anojகர்ப்ப காலங்களில் பெண்கள் சமநிலையுடன் இருக்கும் படிக்கட்டுகளில் தாராளமாக ஏறலாம். ஆனால், சமச்சீரற்ற படிக்கட்டுகள் நமக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனமுடன் ஏறுங்கள்.
Image Source: pexels-com
கர்ப்ப காலத்தில் இரண்டாம் காலக்கட்டம் தான் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காரணம் குழந்தை அடிவயிற்றில் இறங்கி இருக்கும். அப்போது படிக்கட்டு ஏறும்போது புவியீர்ப்பு விசை பின்னோக்கி உடலை இழுக்கும்.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் சிறிது சிறிதாக குழந்தை எடை அதிகரிக்க தொடங்கும். அதனால் படிக்கட்டுகளில் ஏறுவதற்குள் நமக்கு மூச்சு வாங்குதல், தலை சுற்றுதல் போன்ற பிரச்சினை உண்டாகலாம். அவசியம் இருப்பவர்கள் பிடிமானங்களுடன் படிக்கட்டுகள் ஏற முயற்சிக்கவும்.
Image Source: istock
படிக்கட்டுகளில் ஏறுவது ஒருவகையான உடற்பயிற்சி என்றாலும் கர்ப்ப காலத்தில் ஏறுவது பாதுகாப்பானது அல்ல. அது உயர் ரத்த அழுத்த பாதிப்பை உண்டாக்கலாம். ஒருவேளை ஏற வேண்டிய அவசியம் இருப்பவர்கள் பாதுகாப்புடனும், கவனமுடனும் ஏற வேண்டும்
Image Source: pexels-com
கர்ப்ப காலத்தில் பெண்கள் மெதுவாக நடப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். அதேபோல் படிக்கட்டுகள் ஏறினால் எந்த படியையும் தவறவிடக்கூடாது. அதேசமயம் வழுக்கும் தன்மை கொண்ட படிகளில் நடப்பதை தவிர்க்கவும்.
Image Source: istock
பெண்கள் படிக்கட்டுகளில் ஏறும்போது வெளிச்சம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். படிக்கட்டுகளில் தவறி விழுந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
Image Source: pexels-com
கர்ப்ப காலங்களில் முதல் மூன்று மாதங்களில் படிக்கட்டுகளில் ஏறுவது பாதுகாப்பானது. அதனை தாண்டி முடிந்தவரை தவிர்க்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி செய்யுங்கள்.
Image Source: istock
கர்ப்ப காலங்களில் பெண்கள் படிக்கட்டுகள் ஏறுவதால் சிறிய அளவிலான இரத்தப்போக்கு, குறைந்த இரத்த சர்க்கரை அளவு, சமநிலை இழப்பு, தலைச்சுற்றல், மயக்கம் என பல அறிகுறிகள் உண்டாகலாம் என்பதால் கவனம் கொள்ளவும்.
Image Source: pexels-com
கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது, மூச்சு பயிற்சியில் ஈடுபடுவது என உடலை எப்போது சுறுசுறுப்பாக வைத்திருங்கள். தினமும் படிகட்டுகளில் ஏற வேண்டிய சூழ்நிலை இருக்கும் பட்சத்தில், மருத்துவரிடம் முன்கூட்டியே ஆலோசிக்க வேண்டும்
Image Source: istock
Thanks For Reading!