May 24, 2024
By: mukesh Mகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் மனக்கவலை, மனசோர்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்; சில அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்துவதன் மூலம் இதிலிருந்து நிவாரணம் பெறலாம். குறிப்பிட்ட அந்த எண்ணெய் வகைகள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
லாவண்டர் எண்ணெயை சருமத்தில் நேரடியாக பயன்படுத்தலாம். இது மன அழுத்தம், பதட்டம், மனசோர்வு ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் மனசோர்வை சரி செய்யவும் இது உதவுகிறது.
Image Source: istock
ஒற்றைத் தலைவலி உள்ள கர்ப்பிணி பெண்கள் இந்த புதினா எண்ணெயை நிவாரணியாக பயன்படுத்தலாம். சிசேரியனுக்கு பிறகு வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகளை சரி செய்ய இது உதவுகிறது.
Image Source: istock
கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவத்தின் போது ஏற்படும் பிரசவ வலியை குறித்து கவலைபடுவார்கள். பிரசவத்தின் போது ஏற்படும் வலியின் தீவிரத்தை சரி செய்ய அல்லது குறைக்க இது உதவுகிறது.
Image Source: pexels-com
பிரசவ காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மனக்கவலையை குறைக்க உதவுகிறது. இதனை லோஷன் அல்லது எண்ணெய்களில் சேர்த்து உடலில் மசாஜ் செய்ய பயன்படுத்தலாம்.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலியை குணப்படுத்த இது உதவுகிறது. குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் மனசோர்வை சரி செய்யவும், பிரசவ வலியின் தீவிரத்தை குறைக்கவும் உதவுகிறது.
Image Source: istock
பிரசவ காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மன கவலை மற்றும் பிரசவ வலியை குறைக்க இது உதவுகிறது. மேலும் மன அழுத்த பிரச்சனைகள் போன்றவை இருந்தால் அதனை சரி செய்யவும் இது உதவுகிறது.
Image Source: istock
இதில் சில ஆயில்கள் சமைக்கும்போது பயன்படுத்தப்படுகின்றன. மற்ற சில கிரீம்கள், டோனர்கள், லோஷன் போன்ற வடிவில் பயன்படுத்தப் படுகின்றன. சில, குளிக்கும் போது குளியல் நீரில் சேர்த்து பயன்படுத்தப் படுகின்றன.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் இந்த சில அத்தியாவசிய எண்ணெய்கள் ஆரோக்கிய நன்மைகள் சில அளிக்கும் நிலையிலும்; இதன் பாதுகாப்பு குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ ஆய்வுகளும் இல்லை. எனவே இது போன்ற அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை ஆலோசித்து பின் பயன்படுத்துவது நல்லது.
Image Source: istock
Thanks For Reading!