Jun 7, 2024
By: mukesh Mகர்ப்பிணிகளுக்கு பொதுவாக புளிப்பான உணவுகள் பிடிக்கும். அந்த வகையில் புளியை அதிகம் இவர்கள் சேர்த்துக்கொள்வது உண்டு. எனினும், புளியை கர்ப்பிணிகள் அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது எனவும்? புளியை உட்கொள்வதால் சிக்கல்கள் பல உண்டாகும் எனவும், நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்!
Image Source: istock
கர்ப்ப காலத்தில் இந்த புளியை சேர்த்துக் கொள்வதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால் அரிப்பு, வீக்கம், தலைச்சுற்றல், மூச்சு திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
Image Source: istock
புளியில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இதனை சாப்பிடும் போது இரைப்பை குழாயில் அமிலத்தின் அளவை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த அமிலத்தின் அதிகரிப்பு உணவு செரிமானத்தை பாதித்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தற்காலிக நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் என்பதால் நீரிழிவு பாதிப்பு உள்ள கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் புளியை தவிர்ப்பது நல்லது.
Image Source: pexels-com
கர்ப்பிணி பெண்கள் புளியை அடிக்கடி உட்கொள்வதால் வயிறு எரிச்சல், வாயு போன்ற பாதிப்புகளை எதிர் கொள்வார்கள். மேலும் இது ஒவ்வாமையை ஏற்படுத்தி குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகளையும் ஏற்படுகிறது.
Image Source: istock
புளியில் உள்ள ஆஸ்பிரின் பண்புகள் உணவுகளை அதிகமாக உறிஞ்சும் என்பதால் இது குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதற்கு வழிவகுக்கிறது. மேலும் இது குழந்தையில் ஒழுங்கற்ற இரத்த ஓட்டத்தை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் புளியை அதிகமாக உட்கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி, கர்ப்ப காலத்திற்கு தேவையான புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை தடுக்கிறது.
Image Source: istock
புளி ஒரு மலமிளக்கி என்பதால் அதிகமாக உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் சோர்வு, நீர்சத்து குறைபாடு போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றன.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் புளியை நேரடியாக உட்கொள்ளாமல் மற்ற உணவுகளுடன் சேர்த்து பயன்படுத்தலாம். புளிரசம், புளி மிட்டாய், புளியோதரை போன்றவற்றை நீங்கள் உட்கொள்ளலாம். அதேநேரம், நிபுணர் பரிந்துரைக்கும் அளவில் அளவாக எடுத்துக்கொள்வது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!