Apr 30, 2024
By: mukesh Mகர்ப்ப காலத்தின் போது பெண்கள் ஆரோக்கியமான உணவு வழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியமாக இருக்கும் நிலையில், மங்குஸ்தான் பழம் எடுத்துக்கொள்வது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
மங்குஸ்தான் பழத்தில் கர்ப்பிணிகளின் நலன் காக்கும் ஊட்டச்சத்து பல காணப்படுகிறது. அந்த வகையில் இது கர்ப்ப காலத்தில் உண்பதற்கு ஏற்ற ஒரு பழமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், அளவாக உட்கொள்வது அவசியம்!
Image Source: istock
மங்குஸ்தான் பழத்தில் கர்ப்பிணிகளின் நலன் காக்கும் போலட் போதுமான அளவு காணப்படுகிறது. கருவின் வளர்ச்சி மற்றும் பிரசவகால சிக்கலைகளை தடுக்க இந்த போலட் மிகவும் உதவியாக உள்ளது.
Image Source: istock
மங்குஸ்தான் பழத்தில் காணப்படும் போதுமான அளவு மாங்கனீசு ஆனது, கருவின் குருத்தெலும்பு மற்றும் உடற்கூடு அமைப்பு உருவாக்குதலுக்கு பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் இத கருவின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவுகிறது.
Image Source: pexels-com
வைட்டமின் சி நிறைந்து காணப்படும் இந்த மங்குஸ்தான் பழத்தின் நுகர்வு ஆனது, வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை கட்டமைக்க உதவுகிறது. மேலும், கர்ப்ப காலத்தில் உண்டாகும் கிருமி தொற்று, நோய் தொற்று பிரச்சனைகளையும் தடுக்கிறது.
Image Source: istock
உடல் செல்களின் சேதத்தை தடுப்பதோடு, புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் செல்களின் பரவலை தடுக்கும் பண்பும் இந்த மங்குஸ்தான் பழத்தில் காணப்படுகிறது. அந்த வகையில் இது புற்றுநோய் உண்டாவதன் வாய்ப்பை குறைக்கிறது.
Image Source: istock
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் ஒரு இயற்கை மருந்தாக மங்குஸ்தான் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த பழம் ஆனது, கர்ப்பகால நீரிழிவு பிரச்சனையை தடுக்க உதவி செய்கிறது!
Image Source: istock
கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று மலச்சிக்கல். நார்ச்சத்து நிறைந்த இந்த மங்குஸ்தான் பழம் ஆனது, மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறது!
Image Source: istock
கர்ப்பிணிகளுக்கு இந்த மங்குஸ்தான் பழம் பல வகையில் நன்மை அளிக்கும் என்றபோதிலும் இதனை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது. அளவுக்கு மிகுதியாக எடுத்துக்கொள்வது வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வாந்தி - குமட்டல் பிரச்சனைக்கு வழிவகுக்கும்!
Image Source: istock
Thanks For Reading!