May 13, 2024
By: mukesh Mகர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கிய உணவு வழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியமாக இருக்கும் நிலையில், இந்த ஆட்டு சீஸினை இவர்கள் உட்கொள்வது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
நிபுணரகள் கூற்றுப்படி நுண்ணுயிர் நீக்கப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ளலாம். இருப்பினும் உங்களுக்கு பால் சார்ந்த பொருட்களினால் ஒவ்வாமை இருக்கிறது என்றால் கர்ப்ப காலத்தில் இதனை தவிர்ப்பது நல்லது.
Image Source: pexels-com
நுண்ணுயிர் நீக்கப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ்களில் தீங்குகளை விளைவிக்க கூடிய பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் ஊட்டச்சத்து நன்மைகள் தக்க வைக்கப்பட்டு ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
Image Source: istock
நுண்ணுயிர் நீக்கப்பட்ட அல்லது நீக்கப்படாத பாலில் இருந்து தயாரிக்கப்படும் கெட்டியான சீஸில் குறைவான அளவு தண்ணீர் இருப்பதால் பாக்டீரியாக்கள் தொடர்ந்து வளர்வதை அது தடுக்கிறது. எனவே கர்ப்பமாக இருக்கும் போது கெட்டியான சீஸை பயன்படுத்தலாம்.
Image Source: istock
நுண்ணுயிர் நீக்கப்படாத பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ்களில் லிஸ்ட்டீரியா எனப்படும் நோய் தொற்றின் ஆபத்து அதிகம். லிஸ்ட்டீரியா கரு சிதைவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
Image Source: istock
ஆட்டு பாலில் இருந்து நுண்ணுயிர் நீக்கப்பட்டு தயாரிக்கப்படும் சீஸ்கள் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ள உகந்தது. இது குழந்தை மற்றும் தாயின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Image Source: istock
ஆடுகளின் பாலில் இருந்து நுண்ணுயிர் நீக்கப்பட்டு தயாரிக்கப்படும் சீஸ்களில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து ஆகும். குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான உடலுக்கு புரதச்சத்து மிகவும் அவசியம்.
Image Source: istock
குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் நுண்ணுயிர் நீக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஆட்டுப்பால் சீஸில் நிரம்பியுள்ளது. இந்த சீஸில் அதிக கால்சியம் நிரம்பியுள்ளதால் குழந்தையின் எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
Image Source: istock
ஆடுகளிலிருந்து தயாரிக்கப்படும் சீஸ்களில் வைட்டமின் ஏ நிரம்பியுள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!