Jun 10, 2024
By: mukesh Mகர்ப்ப காலத்தில் பெண்கள் பலரும் குங்குமப்பூ எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில், இந்த குங்குமப்பூவை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மை - தீமை குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய குங்குமப்பூவை கொடுக்கலாம். குங்குமபூவில் உள்ள அஸ்ட்ரிஜென்டி பண்புகள் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
Image Source: istock
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்த பிரச்சனைகளை சரிசெய்ய இந்த குங்குமப்பூவில் உள்ள பண்புகள் உதவுகின்றன. இதில் உள்ள குரோசின் மற்றும் சப்ரானல் போன்ற பண்புகள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்ச்சி காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு உடலில் உள்ள தசைகள் மற்றும் எலும்புகளில் வளர்ச்சி ஏற்படுகிறது. இது மூட்டுகள் மற்றும் வயிற்று பகுதிகளில் பிடிப்புகள் அல்லது வலியை ஏற்படுத்தலாம். குங்குமப்பூவில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்பு இதனை சரி செய்ய உதவுகிறது.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தசைப்பிடிப்புகள் வலி காரணமாக தூங்குவதில் சிரமத்தை எதிர்கொள்ளலாம். இந்த குங்குமப்பூவில் உள்ள பண்புகள் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் சிறந்த தூக்கத்தை பெற உதவுகிறது.
Image Source: pexels-com
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக கர்ப்பிணி பெண்களின் மனநிலையில் மாறுபாடுகள் ஏற்படுவது பொதுவானது. இந்த குங்குமப்பூவில் உள்ள பண்புகள் மன அழுத்தத்தை எதிர்த்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Image Source: istock
குங்குமப்பூவில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், அவை கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதனால் தமனிகள் மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு இதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களின் சேதமடைந்த முடிகளை சரி செய்யவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் குங்குமப்பூவில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் உதவுகின்றன. கூந்தல் சார்ந்த தயாரிப்புகளில் முக்கிய மூலப் பொருளாக குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது.
Image Source: istock
பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு காலை எழுந்தவுடன் ஏற்படும் சோர்வினை சரி செய்ய இந்த குங்குமப்பூ உதவுகிறது. குங்குமப்பூவை தேநீரில் கலந்து குடித்து வர சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பான உணர்வை பெறலாம்.
Image Source: istock
Thanks For Reading!