Aug 18, 2024
கர்ப்ப காலத்தில் சாப்பிடாமல் விரதம் இருப்பதால் குழந்தையின் வளர்ச்சிக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் தாயின் உடல் நலமும் குழந்தையின் உடல் நலமும் பாதிக்க வாய்ப்புள்ளது.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் பெண்கள் விரதம் இருப்பதால் தலைவலி, சோர்வு, அமிலத்தன்மை மற்றும் தலைசுற்றல் ஏற்படலாம். இதனால் நீரிழிவு நோய் பாதிப்புகள் கூட ஏற்படலாம்.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் பெண்கள் விரதம் இருப்பதால் குறைவான எடை கொண்ட குழந்தைகள் பிறக்கலாம். இதனால் கருவின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. டைப் 2 டயாபெட்டீஸ், இதய நோய் ஏற்படும்.
Image Source: istock
விரதம் இருப்பதால் கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஹார்மோன் அளவு அதிகரிப்பால் குழந்தைக்கு அறிவாற்றல் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் இடைப்பட்ட விரதம் இருப்பதும் தாய் மற்றும் குழந்தை இருவரையும் பாதிக்கும். இதனால் எடை இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் விரதம் இருக்க நினைத்தால் நாள் முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். நிறைய தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை குடிக்க வேண்டும்.
Image Source: istock
பழங்கள் இயற்கையான சர்க்கரை மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. எனவே இரண்டு மூன்று வகையான பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பால், தேங்காய் நீர் எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
விரதம் இருக்கும் காலத்தில் நீண்ட தூரம் நடப்பதோ அல்லது உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிருங்கள். முடிந்த வரை ஓய்வு எடுப்பது நல்லது.
Image Source: istock
விரதம் இருக்கும் காலங்களில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். அறிகுறிகளை அசால்ட்டாக விட வேண்டாம்.
Image Source: pexels-com
Thanks For Reading!