[ad_1] கர்ப்ப காலத்தில் ‘ரூயிபோஸ் டீ’ - நல்லதா? இல்லை கெட்டதா?

கர்ப்ப காலத்தில் ‘ரூயிபோஸ் டீ’ - நல்லதா? இல்லை கெட்டதா?

Jun 6, 2024

By: mukesh M

ரூயிபோஸ் டீ!

ரூயியோஸ் தேயிலை எனப்படுவது தென்னாப்பிரிக்காவில் பரலாக பயன்படுத்தப்படும் ஒரு அரிய மூலிகை வகை தேயிலை ஆகும். இந்த தேயிலை பயன்படுத்தி தயார் செய்யப்படும் தேநீர், கர்ப்பிணிகளுக்கு அளிக்கும் நன்மை - தீமை பற்றி இங்கு காணலாம்!

Image Source: pexels-com

கர்ப்பிணிகளுக்கு ரூயிபோஸ் டீ?

இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்திருப்பதால் தாராளமாக ரூயிபோஸ் டீயை அருந்தலாம். இருப்பினும் கர்ப்பிணி பெண்கள் இது போன்ற புதிய உணவுகள் அல்லது டீயை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது!

Image Source: istock

இதன் ஊட்டச்சத்து பயன்கள் என்ன?

சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கும் இந்த தேநீரின் ஊட்டச்சத்து மதிப்புகள் தயார் செய்யப்படும் விதத்தை பொறுத்து மாறுபடுகிறது. பொதுவாக ஒரு கப் ரூயிபோஸ் தேநீரில் நாள் ஒன்றுக்கு தேவையான புரதச்சத்து, காப்பர், மெக்னீசியம் மற்றும் பல தாதுக்கள் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

Image Source: istock

கர்ப்ப காலத்தில் இதன் பயன்கள்!

கர்ப்ப காலத்தில் பெண்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் இந்த ரூயிபோஸ் டீ உதவுகிறது.

Image Source: istock

உடல் எடையை நிர்வகிக்க உதவும்!

கர்ப்ப காலத்தில் உடல் எடை கூடுவது பொதுவானது. தினசரி இந்த ரூயிபோஸ் தேநீரை குடிப்பதால் வளர்ச்சிதை மாற்றம் ஆரோக்கியமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த டீயில் உள்ள பண்புகள் உடல் எடையை நிர்வகிக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது.

Image Source: istock

சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது!

நமது உடலில் இரத்த நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ரால்களை தங்க விடாமல் கரைக்கும் தன்மை இந்த ரூயிபோஸ் தேநீரில் உள்ளது. இதனால் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களின் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

Image Source: istock

சிறந்த தூக்கத்திற்கு வழி வகுக்கிறது!

ரூயிபோஸ் டீயில் ஃகாபினின் அளவு குறைவாக இருப்பதால் கர்ப்ப காலத்தில் தூங்குவதற்கு முன்பு இந்த டீயை அருந்துவது கர்ப்பிணி பெண்களின் மனசோர்வு, கவலை போன்ற பிரச்சனைகளை சரி செய்து நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கிறது.

Image Source: istock

அளவாக அருந்த வேண்டும்!

கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக ரூயிபோஸ் டீயை அருந்துவதால் சில பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும். ஒரு நாளைக்கு இரண்டு கப் ரூயிபோஸ் தேநீர் அருந்துவது பாதுகாப்பானது. இருப்பினும் மருத்துவரின் ஆலோசனையுடன் இதனை நீங்கள் குடிப்பது ஆரோக்கியமானது.

Image Source: istock

அளவுக்கு மிகுதியானால்!

காபின் குறைவாக உள்ள இந்த தேநீரின் அதிகப்படியான நுகர்வு ஒரு சிலருக்கு ஒவ்வாமைகளை ஏற்படுத்தலாம். கர்ப்பிணி பெண்கள் இந்த டீயை அருந்திய பிறகு ஒவ்வாமை அறிகுறிகளை கண்டறிந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.

Image Source: istock

Thanks For Reading!

Next: கர்ப்ப காலத்தை சிறப்பாக மாற்றிட பெண்கள் செய்ய வேண்டியவை!

[ad_2]