May 23, 2024
நகர வாழ் மக்களின் பிரதான காலை உணவாக கார்ன்ஃப்ளக்ஸ் (Corn flakes) பார்க்கப்படும் நிலையில், கர்ப்பிணிகளுக்கு இது நல்லதா? இதை உட்கொள்வதால் இவர்கள் பெறும் நன்மை - தீமை என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: pexels-com
நிபுணர்கள் கூற்றுப்படி இந்த Corn flakes இரும்பு சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, டி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. எனவே, நிபுணர்கள் பரிந்துரைக்கும் அளவில் இதனை அளவாக எடுத்துக்கொள்வதில் பிரச்சனை இல்லை!
Image Source: istock
கார்ன்ஃப்ளக்ஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது மலச்சிக்கல் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. தகவல்கள் படி ஒரு கோப்பை கார்ன்ஃப்ளக்ஸில் குறைந்தது 25 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
Image Source: istock
தினசரி ஒரு கிண்ணம் கார்ன்ஃப்ளக்ஸ் உட்கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும், உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து கர்ப்பிணிகளின் நலன் காக்க இது உதவுகிறது.
Image Source: istock
கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி பசிக்கும் என்பதால் அதிகமாக சாப்பிட தொடங்குவார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். நார்ச்சத்து நிறைந்த கார்ன்ஃப்ளக்ஸ், பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையை பராமரிக்கிறது!
Image Source: istock
கடைகளில் கிடைக்கும் கார்ன்ஃப்ளக்ஸில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இதனை அதிக அளவில் உட்கொள்ளும் போது கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு தாய்க்கும் ஆரோக்கிய கேடு ஏற்படுகிறது.
Image Source: istock
தரமற்ற கார்ன்ஃப்ளக்ஸ் வாய்வு, வயிற்று வலி, வீக்கம் போன்ற உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இதை அதிக அளவில் உட்கொள்ளும் போது உடலில் உணவுப் பொருட்களை உறிஞ்சும் தன்மை குறைகிறது.
Image Source: istock
இயற்கை முறையில் அல்லாமல் செயற்கை நிறங்கள், சுவைகள் ஆகியவை கூட்டப்பட்டு தயாரிக்கப்படும் கார்ன்ஃப்ளக்ஸில் தீங்கு விளைவிக்க கூடிய ரசாயனங்கள் இருக்கலாம். எனவே தரமான முறையில் தயாரிக்கப்படும் கார்ன்ஃப்ளக்ஸ்களை தேர்ந்தெடுத்து வாங்கலாம்.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் எந்த ஒரு உணவையும் சேர்த்துக் கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். காரணம், தவறான உணவு வழக்கம் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்க கூடும்!
Image Source: istock
Thanks For Reading!