Jun 5, 2024
By: Anojகர்ப்ப காலம் முழுவதும் நடைபெறும் ஒவ்வொரு சந்தோசம், துக்கம், கவலை, எண்ணங்கள் என அனைத்து நிகழ்வுகளையும் குறிப்பாக எழுதி வைத்துக் கொள்ளலாம். இது ஆக்கப்பூர்வமான ஒன்றாக இருப்பதை தாண்டி மற்றவர்களை வழி நடத்தவும் உதவும்.
Image Source: pexels-com
ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். இதுதொடர்பான வீடியோக்கள் அதிகளவில் இணையத்தில் கிடைக்கும். இந்த நிகழ்வுகள் மன அழுத்தத்தை குறைக்கும்.
Image Source: pexels-com
கர்ப்ப கால நிகழ்வுகளை எல்லாம் போட்டோ, வீடியோ எடுத்து ஆவணப்படுத்தலாம். இது குழந்தைகளிடம் காட்டும்போது வாழ்க்கையின் முக்கியத்துவம் புரிய வாய்ப்புள்ளது.
Image Source: pexels-com
கர்ப்ப காலத்தில் கடுமையான மன அழுத்தத்தற்கு பெண்கள் ஆளாக நேரிடும். எனவே யோகா, தியானம், நடன வகுப்புகள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நிகழ்வுகளில் ஈடுபடலாம்.
Image Source: pexels-com
விதவிதமாக சமைப்பது, பல உணவுகளை முயற்சி செய்வது என உடலையும், மனதையும் ஆக்டிவாக வைக்க இதுபோன்ற செய்களில் ஈடுபடலாம்.
Image Source: istock
குழந்தை பிறந்த பிறகு எப்படியெல்லாம் அவர்களில் சூழல் இருக்க வேண்டும் என்பதை கர்ப்ப காலத்தில் திட்டமிடலாம். படுக்கையறைகள் தொடங்கி, குழந்தைகளுக்கான பொருட்கள் வரை முடிவு செய்யலாம்.
Image Source: istock
பிடித்த பாடல் கேட்பது, இசைக்கருவிகள் வாசிப்பது ஆகியவை கர்ப்ப காலத்தை மன மகிழ்ச்சியோடு வைத்திட சிறந்த பயிற்சியாகும்.
Image Source: istock
புதிய பாதுகாப்பான இடங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று வரலாம். புதிய சூழல் நிச்சயம் உடலுக்கும்,மனதுக்கும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
Image Source: pexels-com
உடல் அனுமதித்தால் படம் பார்க்க வெளியில் செல்வது, சாப்பிட ஹோட்டல் போவது போன்றவற்றை குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் மேற்கொள்ளலாம்.
Image Source: istock
Thanks For Reading!