Jun 24, 2024
By: Nivethaநமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கியமளிக்கும் பண்புகள் கறிவேப்பிலையில் உள்ளது. இதனை நமது வீட்டில் வைத்து வளர்க்கும் நிலையில், ஏற்படும் சில இடர்கள் மற்றும் அதற்கான தீர்வுகளை காண்போம் வாருங்கள்.
Image Source: pixabay
பொதுவாக கறிவேப்பிலை செடி வேர்கள் அழுகி போவதற்கும், இலைகள் காய்ந்து போவதற்கும் காரணம் அதிகளவு தண்ணீர் தொட்டியில் தேங்குவது தான். எனவே பொதுவான வடிகால் துளைகள் கொண்ட தொட்டியை பயன்படுத்துவது சிறந்தது.
Image Source: pexels
பூச்சி தாக்குதல் காரணமாக இந்நிலையடையும் இலைகளை உடனடியாக அகற்றவும். மேலும் இதனை தடுக்க வாரம் ஒருமுறை மாலை வேளையில் செடியில் வேப்ப எண்ணெய்யை தெளித்து விடுங்கள்.
Image Source: pexels
அதிகளவு தண்ணீர் பாய்ச்சினால் செடியின் இலைகள் நிறம் மாறுவதோடு, உதிரவும் துவங்கும். எனவே, 2-3 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் விட்டால் போதுமானது. அதுவே இலையுதிர் காலம் என்றால் வாரம் ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதுமானது.
Image Source: pixabay
கறிவேப்பிலை இலைகள் சுருண்டாலோ, உதிர்தல் அல்லது மஞ்சள் நிறமாக மாறினாலோ அதற்கு அதிகப்பட்ச நேரடி சூரிய ஒளி காரணமாக இருக்கக்கூடும். அதனால் சிறிதுநேரம் மட்டும் நேரடி சூரிய ஒளியில் வையுங்கள்.
Image Source: istock
அதிக நீர்பாசனத்தால் கறிவேப்பிலை செடி பூஞ்சையால் பாதிக்கப்படும். அப்படியெனில் நீர்பாசனத்திற்கான அட்டவணையினை அமைப்பதோடு, வெதுவெதுப்பான நீரில் ரசாயனம் இல்லா சோப்பை கலந்து செடியை கழுவவும்.
Image Source: pexels
கறிவேப்பிலை செடியை நீங்கள் வீட்டில் வைத்து வளர்த்தால் குளிர்காலத்தில் அதனை சூடான இடத்திற்கு மாற்றுங்கள், மண்ணில் நட்டிருந்தால் அதனை மேல் இருந்து கீழ்வரை குப்பை பைகளை கொண்டு மூடி வையுங்கள். இது செடியை குளிர்ச்சியில் இருந்து பாதுகாக்கும்.
Image Source: istock
கறிவேப்பிலை இலைகள் நச்சுத்தன்மை கொண்டதால் அதனை கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்
Image Source: istock
கறிவேப்பிலையின் முக்கியமான மூன்று வகைகள், அதில் வழக்கமாக பயன்படுத்தப்படும் மரம் எவ்வித வாசனையுமின்றி வேகமாக வளரும். அடுத்த வகையான குள்ளன் தாவரம் குட்டையான நீண்ட இலைகளை கொண்டிருக்கும். காம்தி ரகம், நறுமணம் கொண்டிருக்கும் ஆனால் வளர தாமதமாகும்.
Image Source: istock
Thanks For Reading!