May 15, 2024
கற்பூரம் ஒரு வாசனைமிக்க பொருளாகும். இது உச்சந்தலை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உச்சந்தலை அரிப்பு, பொடுகு இவற்றை போக்குகிறது. முடி வளர்ச்சியை தூண்டுகிறது. கற்பூரத்தை எண்ணெயில் போட்டு காய்ச்சி தேய்த்து வந்தால் கூந்தல் ஆரோக்கியம் மேம்படும்.
Image Source: istock
கற்பூரம் ஒரு இயற்கையான வலி நிவாரணியாகும். இது உச்சந்தலை தொற்றை விரட்டுகிறது. சரும எரிச்சலை குறைக்கிறது. கற்பூரம் மெந்தோலுடன் இணைந்து பித்த தோஷத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது.
Image Source: istock
கற்பூரம் பொடுகுத் தொல்லையை விரட்டும் சக்தி வாய்ந்த பொருளாகும். இது உச்சந்தலையில் மலாசீசியா ஈஸ்ட் பெருக்கத்தைத் தடுக்கிறது. இது வீக்கத்தைக் குறைத்து உச்சந்தலையை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
Image Source: istock
ஸ்கால்ப் ஃபோலிகுலிடிஸ் போன்ற பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கிறது. இந்த பாக்டீரியாக்களால் உச்சந்தலையில் ஏற்படும் புடைப்புகள், முகப்பருக்கள், சிறிய வீக்கங்களை சரி செய்ய முடியும். கற்பூரத்துடன் வேம்பு, துளசியை பயன்படுத்தி வரலாம்.
Image Source: istock
ஆராய்ச்சியின் படி, கற்பூரத்தை பயன்படுத்தி வருவது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடியின் வேர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
Image Source: istock
கற்பூரம் கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. கற்பூர எண்ணெயை கூந்தலில் தடவி வந்தால் வறண்டு போதல், முடி உடைவது போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும்.
Image Source: pexels-com
தேங்காய் ண்ணெயை காய்ச்சி அதில் கற்பூர வில்லைகளை போட்டு சூடாக்கி பயன்படுத்தி வந்தால் தலையில் பேன் தொல்லை இருக்காது. கற்பூரத்தின் வாசனைக்கு பேன்கள் அழிந்து விடும்.
Image Source: istock
கற்பூரத்திற்கு பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. முடி உதிர்தலை தடுக்கிறது. உச்சந்தலையில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
Image Source: istock
தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் கற்பூரத்தை போட்டு தலைக்கு தேய்த்து வரலாம். கூந்தலுக்கு பயன்படுத்துவதற்கு முன்பு சிறுதளவு எடுத்து பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!