Aug 2, 2024
இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் இனங்களின் நிலம் என்பதால் அந்தந்த கலாச்சாரங்களுக்கேற்ப தனித்துவமான தற்காப்புக் கலைகளைக் கொண்டது. அவற்றுள் பிரபலமான சிலவற்றைப் பார்ப்போம்.
Image Source: pexels-com
கேரளாவில் தோன்றிய இந்த கலை கி.பி 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது ஆயுதமற்ற போர் முறை உட்பட வாள் சாண்டைப் போன்ற ஆயுதப் பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
Image Source: twitter-com
சேர, சோழ, பாண்டிய ஆட்சியாளர்களால் ஊக்குவிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தோன்றிய இந்த கலை பற்றிய குறிப்புகள் ‘சிலப்பதிகாரம்’ போன்ற இலக்கியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Source: twitter-com
மணிப்பூரின் மெய்டே கலாச்சாரத்தைச் சேர்ந்த இந்த கலை, ‘தங்’ என்றால் வாளையும், ‘டா’ என்றால் ஈட்டியையும் குறிக்கிறது. ஆங்கிலேயர்களை எதிர்க்க அப்பகுதி மக்களால் இந்த கலை பயன்படுத்தப்பட்டது.
Image Source: twitter-com
மர வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தும் இந்த கலையானது இமாச்சல் பிரதேசத்தின் விளையாட்டு மற்றும் கலாச்சாரத்தின் கலவையாகும். அம்பின் முனையில் இருக்கும் மரத் துண்டே தோடா என்று அழைக்கப்படுகிறது.
Image Source: twitter-com
பஞ்சாபின் சீக்கியர்களால் பின்பற்றப்படும் ஆயுதம் ஏந்திய தற்காப்புக் கலையாகும் இது. சீக்கிய பாரம்பரியத்தின் சான்றாகவும், அவர்களின் திறமை, வீரம் ஆகியவற்றின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
Image Source: twitter-com
மிசோரமில் தோன்றிய இந்த தற்காப்புக் கலை கடுமையான விதிமுறைகளைக் கொண்டது. வீரர்கள் இடுப்பில் அமைந்திருக்கும் பெல்ட்டைப் பிடித்தவாறு மல்யுத்தம் செய்வது விளையாட்டின் முக்கிய அம்சமாகும்.
Image Source: twitter-com
வாரணாசியில் இருந்து உருவான இது புகழ்பெற்ற ஆயுதம் ஏந்தாத தற்காப்புக் கலை ஆகும். உடல், மனம் மற்றும் ஆன்மீக ஆகிய மூன்று அம்சங்களின் வளர்ச்சியை உள்ளடக்கியது இந்த கலை.
Image Source: twitter-com
பீகாரின் ராஜபுத்திரர்களால் உருவாக்கப்பட்ட இந்த தற்காப்புக் கலையில், ‘பரி’ என்பது கேடயத்தையும், ‘கந்தா’ என்பது வாளையும் குறிக்கிறது. இவை இரண்டையும் பயன்படுத்திச் சண்டையிடுவதை இது குறிக்கிறது.
Image Source: twitter-com
Thanks For Reading!