[ad_1] காய்கறிகளை வேகவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Jun 5, 2024

காய்கறிகளை வேகவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Anoj

வேகவைத்த காய்கறிகள்

நாம் உணவை சமைக்கும் விதங்கள் கூட அதன் ஊட்டச்சத்து மதிப்பை உறுதி செய்யக்கூடும். அந்த வகையில், காய்கறிகளை வேகவைத்து சாப்பிட நிபுணர்கள் சொல்வதற்கான காரணங்களை இங்கு பார்க்கலாம்

Image Source: istock

எடை இழப்புக்கு உதவும்

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு வேகவைத்த காய்கறிகள் சிறந்த தேர்வாகும். பிற சமைத்த உணவுகளுடன் ஒப்பிடுகையில் வேகவைத்த காய்கறிகளில் கொழுப்பு உள்ளடக்கம் சுத்தமாக இருக்காது. அதேபோல், நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால் எடை மேலாண்மைக்கு உதவக்கூடும்

Image Source: istock

அசிடிட்டி தடுக்கலாம்!

வேகவைத்த காய்கறிகள் அசிடிட்டி எதிர்த்து போராட உதவுகிறது. அவை வயிற்றில் தங்கும் நேரம் மிகவும் குறைவு என்பதால், அசிடிட்டி அபாயம் முற்றிலும் குறைய செய்கிறது

Image Source: istock

சிறுநீரக கற்கள்

வேகவைக்கும் பிராசஸ் உணவில் இருந்து 87% ஆக்சலேட்டுகளை நீக்க உதவுகிறது. அவை சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிட முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சிறுநீரக கற்களால் அவதிப்படுவோர் வேகவைத்த காய்கறிகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்

Image Source: istock

சரும ஆரோக்கியம்


கேரட், கீரை, தக்காளி, பீட்ரூட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற வேகவைத்த காய்கறிகள், ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான சருமத்திற்கு வழிவகுக்கும். அவற்றில் அதிக நீர்ச்சத்து இருப்பதோடு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இருக்கக்கூடும்

Image Source: pexels-com

எளிதாக ஜீரணமாகும்

வேகவைத்த காய்கறிகள் எளிதாக ஜீரணமாகக்கூடும். வேகவைக்கும் போது அதிலுள்ள காம்ப்ளக்ஸ் கலவைகள் உடைவதால் எளிதாக ஜீரணமாகிறது. இதுதவிர, வேகவைத்த காய்கறிகளை மென்று சாப்பிடுவதும் எளிதாக இருக்கும்

Image Source: istock

குழந்தைகளுக்கு நல்லது

குழந்தைகளுக்கு வேகவைத்த காய்கறிகள் சிறந்த தேர்வாகும். உதாரணமாக, வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அளிப்பது வயிறு நிரம்பிய உணர்வை தருவதோடு அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் கிடைப்பதை உறுதி செய்யக்கூடும்

Image Source: istock

வேகவைக்க சிறந்த காய்கறிகள்?

கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி ஆகியவற்றை வேகவைக்கும் போது கூடுதல் பலன்கள் கிடைக்கக்கூடும்

Image Source: istock

கவனித்தில் கொள்ள வேண்டியவை

காய்கறிகளை சமமான அளவில் நறுக்கி வேகவைக்க வேண்டும். அதேபோல், காய்கறிகள் கட் செய்தப்பிறகு வாஷ் செய்வதை தவிர்க்க வேண்டும். அவை ஊட்டச்சத்து மதிப்பை குறைக்க செய்யலாம். அதேபோல், கொதிக்கும் போது லேசாக உப்பு சேர்ப்பது காய்கறிகளின் சுவையை அதிகரிக்கும்

Image Source: istock

Thanks For Reading!

Next: ‘வைட்டமின் ஏ’ குறைபாடு ஏற்படுவது ஏன்? இதன் அறிகுறிகள் என்ன?

[ad_2]